1 Comment
  1. சசிகலா says

    கபாலி” படம் பார்த்துவிட்டு நான் கூறிய அதே கருத்துதான்.. இயக்குநர் மகேந்திரனுக்குப் பிறகு ரஜினியின் நடிப்பாற்றலை புரிந்து வைத்திருப்பவர் பா. ரஞ்சித் மட்டுமே. “முள்ளும் மலரும்” படத்திற்குப் பிறகு நான் விரும்பிப் பார்த்த ரஜினி படம் “கபாலி”. இப்போது “காலா”. ரஜினி ஒரு அற்புதமான நடிகர். அவரை வெறும் மசாலா படங்களுக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்ற ஏக்கம் எப்போதும் எனக்கு உண்டு. தனது அரசியல் பார்வையை வைக்க ரஜினியை தன் படங்களில் ரஞ்சித் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என பல விமர்சனங்கள் இருந்தாலும், அந்த அரசியலுக்குள் நான் செல்ல விரும்பவில்லை. அதைப் பற்றி இங்கு பலரும் பலவாறு எழுதித்தள்ளி விட்டார்கள். ஒரு சராசரி சினிமா ரசிகராக நான் பார்க்க ஏங்கிக் கொண்டிருந்த ஒரு நடிகரின் நடிப்புத் திறமையை வெளிக்கொணர்ந்த இயக்குநர் ரஞ்சித்துக்கு my hugs.
    ஒரு நடிகரின் ஸ்கீரின் பிரசென்ஸ் எவ்வளவு மட்டமானதாக இருந்தாலும் அவரது ரசிகர்கள் மட்டுமாவது அதை கொண்டாடுவார்கள். ஆனால் எல்லா தரப்பு ரசிகர்களுமே ரசிக்கும் ஒரே நட்சத்திரம் ரஜினி மட்டுமே. என்னதான் முறுக்கிக்கொண்டு, தான் ஒரு ரஜினி ஹேட்டர் என கூறிக்கொண்டாலும் ரஜினியின் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸை ரசிக்காதவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். நான் சின்ன வயதில் ரசித்தேன், இப்போது இல்லை என சால்ஜாப்பு வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.
    பாட்ஷாவிற்குப் பிறகு கதை நாயகனின் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் என்றால் அது “காலா” மட்டுமே. அதிலும் சண்டைக் காட்சிகளின்போது ரஜினியை காண்பிக்கும் போதெல்லாம் எழும் பின்னணி இசை வேற லெவல். டைட்டில் டிசைனிங் செம. நெருப்பாக ரஜினியின் முகத்துடன் காலா என்ற பெயர் வரும்போது அப்படி ஒரு கம்பீரம்.. சிங்கம் போல் !! இந்த டைட்டிலை பார்ப்பதற்காகவே இன்னொரு முறை படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும் போலயே! குடும்பம் சமேதமாக ஒரு படம் பார்த்துவிட்டு வந்தால் அந்த படத்தின் கதை, அதை சொன்ன விதம், ஹீரோ ஹீரோயின். இவற்றை பற்றிதான் நம் குடும்பத்திற்குள் பேசிக் கொண்டிருப்போம். மார்க்கிஸம், அம்பேத்கார், தலித் அரசியல் என சீரியஸ் டிஸ்கஷனை குடும்பத்திற்குள் உண்டாக்கியுள்ளது “காலா”. இதுபோன்று குடும்பத்தின் டிஸ்கஷனில்தான் நாட்டின், சமுதாயத்தின் முன்னேற்றமும் அடங்கியுள்ளது. குடும்பத்தினருடன் சென்று “காலா” பாருங்கள். படம் பேசும் அரசியலை குடும்பத்தினருடன் முதலில் விவாதியுங்கள்.

    – சசிகலா

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ரஜினியை ராமசாமியாக்க இயக்குனர் ஷங்கர் ஆசை! ஆனால் நோ வே…!

Close