ரஜினியை ராமசாமியாக்க இயக்குனர் ஷங்கர் ஆசை! ஆனால் நோ வே…!

‘ஒன் மேன் ஆர்மி’ டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை கதையை, ஜெயலலிதா மறைவுக்கு பின்தான் படமாக எடுக்க முடியும் என்பது நாடறிந்த தத்துவம். அந்த தத்துவத்தின் பின்னே நடக்க ஆரம்பித்திருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒருவழியாக படத்தை முடித்து அதை பிரமாண்டமாக விளம்பரப்படுத்தவும் செய்கிறார்.

அந்த வகையில் நேற்றைய நாள், டிராபிக் ராமசாமிக்கே ஸ்பெஷல் நாள். ஏன்? இந்தியாவின் முக்கிய இயக்குனரான ஷங்கரே நேரில் வந்து வாழ்த்தினார் டிராபிக் ராமசாமியை. அதோடு விட்டாரா? ” இந்த டிராபிக் ராமசாமி என்னையும் பாதித்த மனிதர். அவருக்குள் ஒரு ஹீரோயிசம் இருக்கும். அதைப் பார்த்து நான் மனசுக்குள் கை தட்டியதுண்டு. இவர் கதையைப் படமாக்க நானும் ஆசைப்பட்டேன். இவர் கத்தி எடுக்காத இந்தியன் . வயசான அந்நியன் அம்பி. இவர் கதையில் ரஜினி சாரை வைத்து எடுக்கக் கூட நினைத்தேன். எஸ்.ஏ.சி. சார் நடிக்கிறார் என்று அறிவிப்பு வந்ததும் வட போச்சே என்ற ஏமாற்றம் . இருந்தாலும் மகிழ்ச்சி. இந்தப் படத்தைப் பார்க்க நான் காத்திருக்கிறேன்.” என்றார் பலத்த கைதட்டல்களுக்கு இடையே!

அண்மைக்காலமாக போராட்டங்களை கொச்சைப்படுத்துவது போல பேசி வரும் ரஜினியை, மூன்று வேளை சாப்பாடும் போராட்டம் போராட்டம் போராட்டம்தான் என்று வாழும் டிராபிக் ராமசாமிக்குள் திணிப்பது சினிமாவில் ஈஸி. ஆனால் அப்படி நடக்காமல் பார்த்துக் கொண்ட இயற்கைக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.

நாம் சொல்கிறோமோ, இல்லையோ? தன் கதையில் ரஜினி நடிக்காமல் போனதற்கு டிராபிக் ராமசாமியே அந்த இயற்கைக்கு நன்றி சொல்வார்!

Read previous post:
என்னது! நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு சிஸ்டரா?

https://www.youtube.com/watch?v=Do2uLWcjoMc&t=162s

Close