அட பார்றா… செல்போனுக்கு தாலி கட்றாங்க

தமிழகத்திலிருக்கும் நமது சினிமாக்கார்களில் பலர் ஆங்கிலத்தில் தலைப்புகள் வைத்துக் கொண்டிருக்க, கர்நாடகாவிலிருந்து தமிழில் படமெடுக்க வந்திருக்கும் ஒருவர் சுத்த தமிழில் பெயர் வைத்திருக்கிறார் என்றால் அது எவ்வளவு பெரிய விஷயம்? ஆமாம்… ‘கைபேசி காதல்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள் அப்படத்திற்கு. படத்தின் ஹீரோ கிரண், ஒரு செல்போனுக்கு தாலி கட்டுவதை போன்ற படத்தை துவக்க விழாவில் வைத்து அனைவரது கவனத்தையும் கவர்ந்தார் கைபேசி இயக்குனர் சந்ரா. (எழுத்துப் பிழையல்ல, பெயரே அப்படிதான்)

ஏன் இப்படி ஒரு கதை? ஏன் இப்படியொரு பெயர்? என்றெல்லாம் அவரிடம் அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டால் பாக்கெட்டிலிருக்கும் செல்போனை எடுத்துக் காட்டுகிறார். இன்னைக்கு பல இளைஞர்களுக்கும் இளைஞிகளுக்கும் இதுதான் உலகமாகிருச்சு. இது இல்லாமல் அவங்களை ஒரு நாள் வாழ்ந்திட சொல்லுங்க பார்ப்போம்? யாராலும் முடியாது. ஒரு மிஸ்டு கால் மூலம் ஒருத்தி அறிமுகம் கிடைக்கிறது ஹீரோவுக்கு. அதையடுத்து என்னாகிறது என்பதைதான் வித்தியாசமாக சொல்லப் போகிறோம் என்றார் சந்ரா.

ரஜினி படத்தையும் ஓட வைக்கிறது இங்கேதான். சாதாரண மினிமம் பட்ஜெட் படத்தை ஓட வைக்கிறதும் இதே தமிழ்நாட்லதான். அதனால்தான் இந்த புது முயற்சியை இங்கே எடுக்கிறோம் என்ற தயாரிப்பாளருக்கு அவரது நம்பிக்கையை காப்பாற்றி வைக்க வேண்டிய பெரும் பொறுப்பும் தமிழ்ர்களுக்கு இருக்கிறது.

செல்போனை பற்றி படமெடுக்கிற இந்த டீமுக்கு, இங்கே செல்போனிலேயே படம் எடுக்கிற அளவுக்கு திறமைசாலிகள் இருக்கிறார்கள் என்பதையும் அடக்கத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

Director Sanra debuts in Tamil with Kaipesi Kadhal

When people in Kollywood preferred stylish English names for their films, here is a man from Kannada film industry ventures into Tamil film, Kaipesi Kadhal, an innovative name in pure Tamil. Not only the name is innovative but the story too, says the director. Ask him why he preferred to do it in Tamil, he said, that only in Tamil industry popular hero as well as small films with strength in the script, has been given a grand welcome. Speaking about the film, he said, in the present conditions no one can do away without a cell phone, as it has become an important tool for everyone. This cell phone of the hero receives missed call from a girl, when both got acquainted, what transpires aftermath, is the crux of the film. This will be told in a novel way, revealed director Sanra. Kiran will play the hero in the film.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
உயிர் இசை, மெய் இசை, உயிர் மெய் இசை – 4 – முருகன் மந்திரம்

“அவள்” என்று அவளை சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. “அக்கா” என்று சொல்வது பின் வரப்போகும் கதைக்கு பொருத்தமாக இல்லாமல் போகலாம். ஆகையால், “அவர்கள்” என்று சொல்லிக்கொள்கிறேன். அதில்...

Close