ஊழியர்களின் ஓய்வு வயதை 60-ஆக உயர்த்தக் கோரி வழக்கு

சென்னை ஐகோர்ட்டில், கோவையை சேர்ந்த ஆர்.பாலகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

பாரதியார் பல்கலைக்கழகத்தில், 1987-ம் ஆண்டு இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தேன். பின்னர், படிப்படியாக பதவி உயர்வுப் பெற்று, கடந்த 2013-ம் ஆண்டு பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்டேன். எனக்கு 2014-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி (நேற்று) 58 வயது பூர்த்தியாவதால், அன்று பணியில் இருந்து ஓய்வு பெற பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

ஐந்தாவது சம்பள கமிஷன் பரிந்துரைகளின்படி, பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் (ஆசிரியர் அல்லாத பிற) ஊழியர்களின் ஓய்வுப்பெறும் வயது வரம்பை 60-ஆக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை தமிழகத்தை தவிர, பிற மாநிலங்கள் அனைத்தும் அமல்படுத்தி உள்ளது.

அதேநேரம், நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்களின் ஓய்வு வயது 60-ஆக நிர்ணயம் செய்யவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அண்மையில் தீர்ப்பளித்துள்ளது.

ஆனால், பாரதியார் பல்கலைக்கழகம், ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58 என்று நிர்ணயம் செய்துள்ளது, அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது.

எனவே, என்னை வருகிற மார்ச் 31-ந் தேதி, பணியில் இருந்து விடுவிக்க பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு தடை விதிக்க வேண்டும். ஓய்வு வயதை 60-ஆக உயர்த்தவேண்டும் என்று மத்திய, மாநில அரசுக்கும், பாரதியார் பல்கலைக்கழகத்துக்கும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த மனுவை, நீதிபதி எஸ்.நாகமுத்து விசாரித்து, ‘இந்த வழக்கிற்கு மத்திய அரசும், தமிழக அரசும், பாரதியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளருக்கும் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். மனுதாரர் ஓய்வுப் பெறுவது தொடர்பாக பாரதியார் பல்கலைக்கழகம் ஏதாவது ஒரு முடிவினை எடுத்தால், அந்த முடிவு, இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது’ என்று இடைக்கால உத்தரவினை பிறப்பித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பாதுகாப்பு காரணங்களுக்காக ரெயிலில் ஏசி பெட்டிகளில் திரைகள் நீக்கம்

ரெயில்களில் மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகளில் பயணிக்கிற பயணிகளின் அந்தரங்கத்தை கருத்தில் கொண்டு இருக்கைகளின் ஓரத்தில் மறைவுக்காக (நடைபாதையில்) திரைகள் பொருத்தப்படுவது, கடந்த 2009-ம் ஆண்டு அமலுக்கு கொண்டுவரப்பட்டது....

Close