வேணாம்னாலும் விடலையே….! ஹீரோவை புகழ்ந்த இயக்குனர்
மொசக்குட்டி என்றால் என்னமோ ஏதோவென ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்க, இவருதாங்க அந்த மொசக்குட்டி என்று ஒரு ஆறடி உயர ஆண்பிள்ளையை காட்டினால் எப்படியிருக்கும்? சொய்ங்க் என்றானார்கள் நிருபர்கள். இருந்தாலும், இவர்கள் சொல்லும் கதையை பார்த்தால் மயிலு ஜீவனுக்கு கோடம்பாக்கத்தில் மரியாதை ராமன் பட்டம் சூட்ட தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது. மயிலு, இளைஞன் என்ற இரண்டு படங்களை இயக்கியிருக்கும் ஜீவனின் மூன்றாவது படம்தான் இந்த மொசக்குட்டி. படம் எப்படியிருக்கும் என்பவர்களுக்கு, இப்படத்தின் தயாரிப்பாளர் யார் என்பதை சொன்னால் ஜீவனிடம் முன் கூட்டியே ஒரு ஆட்டோகிராப் வாங்கி வைப்பது நல்லது என்று நினைக்கத் தோன்றும்.
மைனா, சாட்டை என்று தரமான வெற்றிப்படங்களை எடுத்த ஜான்மேக்ஸ் தயாரிக்கும் மூன்றாவது படம் இது. நான் இதுக்கு முன்னாடி இரண்டு தோல்விப்படங்களை கொடுத்தவன். இருந்தாலும் என்னை வரவழைச்சு கதை கேட்டு உடனே படத்தையும் எடுக்க சம்மதித்திருக்கிற தயாரிப்பாளருக்கு நான் காலமுள்ளவரைக்கும் நன்றியோடு இருப்பேன் என்றார் ஜீவன்.
மைனா மாதிரியே வித்தியாசமான லொக்கேஷன்களை பிடித்திருக்கிறார் ஜீவனும். திரையிடப்பட்ட ட்ரெயல்லர், இது வேற மாதிரி படம் என்கிற ஆர்வத்தை ஏற்படுத்தியது. சாட்டை படத்தில் நடித்த மகிமாதான் இந்த படத்திலும் நாயகி. முந்தைய படத்தில் ஸ்கூல் கோயிங் கேர்ள். இந்த படத்தில் காலேஜ். (பிரமோஷன் சம்பளத்திலேயும் இருக்கணும்மா…)
200 அடி பள்ளத்துல காரோட விழுற காட்சி. நாங்க எல்லாருமே வேணாம்னு தடுத்துட்டோம். பைட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தரும் ஒத்துக்கவே இல்ல. ஆனால் விடாப்பிடியா நான்தான் நடிப்பேன்னு நடிச்சான் தம்பி வீரா. அவனுடைய உழைப்புக்காகவே இந்த படம் ஓடும் என்றார் ஜீவன். மொசக்குட்டி இப்படி விசைக்குட்டியா இருக்கே?
Director Jeevan introduces new face Veera in Mosakkutty
Director Jeevan who made earlier Mayilu and Ilaignan is coming out with his next film titled Mosakkutty. He is introducing a new face Veera in the film, which has Mahima who played the lead in Sattai. In Sattai she played a school going girl and she will be seen as a college going girl in the film, says the director.
The trailer seems to be thrilling with director Jeevan has taken pains to capture scenic and appropriate locations for the shoot, like Mynaa. The director says that new hero Veera has boldly done some stunt sequences himself, despite advised against it by himself and the stunt choreographer Supreme Sundar.
Jeeva concluded saying that he is every obliged and grateful enough to the producer Jhon Max who earlier produced hit films Mynaa and Sattai, although he (Jeevan) was not a hit director with two failed films earlier. He said that the producer not only invited him to hear the story but also agreed to produce the film too.