பேக்கரிய நீ வச்சுக்கோ! “…………..” நான் வச்சுக்குறேன்! பட் அந்த டீல் புடிக்கலையே?

ஜெமினிகணேசன் போய் சேர்ந்துட்டாரு. ஆனால் காதல் மன்னன்கள் மட்டும், கண்டபடி முன்னேறி, காதலும் கண்ணே பிதுங்குகிற அளவுக்கு கள்ளக் காதலுமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். “ஜெமினியோட பிளேஸ் எனக்குதான் ” என்று மெனகெட்டு, காதல் அணைக்கட்டை திறந்துவிடும் இவர்களால், கோடம்பாக்கத்தில் ஒரு ஜோடிக்கும் நிம்மதியில்லை. எந்த நேரத்தில் உள்ளே புகுந்து, எந்த நேரத்தில் வெள்ளம் அடித்துக் கொண்டு போகுமோ என்கிற அச்சத்துடனேயே காதல் செய்கிறார்கள். கட்டிப்பிடிக்கிறார்கள்.

சமீபத்தில் ஒரு காதல் ஜோடியை பிரித்த அந்த நடிகர், மனதில் என்ன நினைத்தாரோ? திடீரென தன்னால் களவாடப்பட்ட அந்த காதலியை அழைத்தாராம். “என்ன இருந்தாலும் உன் புருஷன் நல்லவரும்மா. அவருக்கு ஒண்ணுமே செய்யலையேன்னு எனக்கு கஷ்டமா இருக்கு. வேணும்னா, உன்னை பிரிச்சதுக்காக ஒரு பரிகாரம் பண்ண ஆசைப்படுறேன். பெரிய பட்ஜெட்ல அவர் ஒரு படம் இயக்கட்டும். நானே அந்த படத்தை தயாரிக்கிறேன். நீ வேணா அவர்ட்ட சொல்லிடு” என்றாராம்.

“பேக்கரிய எங்கிட்ட தள்ளிட்டு, மத்ததையெல்லாம் நீயே அள்ளிட்டு போக ஆசைப்படுறியே… நல்லாயிருப்பியா? போய்யா நீயும் ஒன்னோட ஆஃபரும்” என்று அந்த திசைக்கே ஒரு கும்பிடு போட்டாராம் அந்த அப்பாவி கணவர்.

காதல் மாளிகையில் திரியும் இந்த கரப்பான் பூச்சிக்கு யாருய்யா மருந்தடிக்கறது?

 

3 Comments
 1. Mani says

  Amala Paul, Director Vijay and Dhanush

 2. sandy says

  மொதல்ல இவரு அவரு அண்ணனை வாழ வைக்கட்டும்… ஏன்னா அவருதான் குப்புற கவுந்து கோமா ஸ்டேஜுல இருக்காரு….

 3. roja says

  இந்த கரப்பான் பூச்சிக்கு யாருய்யா?
  நம்ம இளைய ஸ்டார் என்று செல்லினம் உண்மையா ?
  இந்த பூனையும் பால் குடிக்குமா.
  வெளிப்படையாய் பேசுறவனை நம்பலாம் ஆனால் அமைதியை இருக்கிறவனை நம்ப முடியாது போல

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Ennodu Vilaiyadu Launch Stills Gallery

Close