இளையராஜா பேமிலியிலிருந்து ஒரு ஹீரோ!
இசைப் பசியா, நடிப்புப் பசியா? இல்லயில்ல... பேய்ப்பசி!
இசையை அணைத்துக் கொண்டளவுக்கு இளையராஜா தன் பேமிலியில் உறவுகளை அணைத்துக் கொள்ளவில்லை. பாவலர் வரதராஜன், ஆர்.டி.பாஸ்கர், உள்ளிட்ட அண்ணன் தம்பிகளில் டாப்புக்கு போனவர் இளையராஜா மட்டும்தான். கங்கை அமரன் காமெடி பீஸ் ஆகிவிட்டார். (பி.ஜே.பி க்கு போனதும் இன்னும் அதன் வீரியம் ஜாஸ்தியாகிவிட்டது)
முன்னுக்குப்போன இசைஞானி, தன் அண்ணன் வாரிசுகளுக்கோ, தம்பி வாரிசுகளுக்கோ என்ன செய்தார் என்பது கேள்விக்குறி. நல்லவேளை… வாரிசுகளுக்குள் இருக்கிறது வாஞ்சையும் அன்பும்.
ஆர்.டி.பாஸ்கரின் மகன் ஹரி பாஸ்கர் ‘பேய் பசி’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இசை யுவன் சங்கர் ராஜா. எவ்வளவு பிசியாக இருந்தாலும் இந்தப்படத்திற்கு இசையமைத்து தருவது தன் கடமை என்று நினைத்தே வொர்க் பண்ணியிருக்கிறார் சின்ன ஞானி.
நானே வாய்ப்பு கொடுத்துருக்கணும். கொடுக்க முடியல. என் தம்பி ஹரி அவனே தேடி போராடி ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொண்டான் என்று வெளிப்படையாகவே இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசினார் வெங்கட்பிரபு.
சரி… அவங்க குடும்ப பஞ்சாயத்து நமக்கெதுக்கு? பேய் பசி என்ன மாதிரியான படம்? பேய் என்றதும் இது ஹாரர் படமாக இருக்கும் என்றுதானே உலகம் நினைக்கும்? அதுதான் இல்லையாம். இது த்ரில்லர் படம். படத்தின் இயக்குனர் ஸ்ரீநிவாஸ் கவிநயம்.
படமும் கவி நயத்தோடு இருக்கும் என்று நம்புவோமாக!