நட்புக்காக ஒரு மெகா தள்ளுபடி! வியக்க வைத்த யுவன்!
இன்றைய யூத் ஐகான்களில் யுவனும் ஒருவர்! அவர் ஆர்மோனியத்தில் கை வைத்தால் அந்தப்படம் மியூசிக்கல் ஹிட்! சமயங்களில் மொத்த படமுமே சூப்பர் ஹிட். அப்படிப்பட்ட யுவன், மிக சமீபமாக வெற்றிப்பட தயாரிப்பாளராகவும் பிசியாகிவிட்டார். இவர் தயாரிப்பில் வெளிவந்த பியார் பிரேமா காதல் விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர்காரர்களுக்கும் கல்லா நிரம்புகிற அளவுக்கு சந்தோஷத்தை கொடுத்ததை நாடறியும்.
அப்படிப்பட்ட யுவன், நட்புக்காகவும் நேரம் ஒதுக்கி நியாயம் செய்கிறார் என்பது எவ்வளவு பெரிய விஷயம். மெட்ரோ சிரீஷ், சாந்தினி ஜோடியாக நடித்திருக்கும் ராஜா ரங்குஸ்கி படத்திற்கு யுவன்தான் மியூசிக். சற்றே லோ பட்ஜெட் ஐடியாவோடுதான் இப்படத்தை துவங்கினார்களாம். மியூசிக் மட்டும் யுவன் இருக்கட்டும் என்றாராம் சிரீஷ். நம்ம பட்ஜெட்டுக்கு அது சரியா வருமா? என்று சந்தேகப்பட்ட இயக்குனர் தரணிதரனுக்கு அதற்கப்புறம் கிடைத்தது அகர்வால் ஸ்வீட்.
‘என் நண்பர்தான் யுவன். நானே பேசுறேன்’ என்று இவரையும் அழைத்துப் போனாராம் சிரீஷ். நண்பனுக்காக தான் வாங்கும் தொகையில் பாதியை மட்டும் கொடுத்தால் போதும் என்றாராம் யுவன். படத்தில் ‘பட்டுக் குட்டி’ என்றொரு பாடல் வருகிறது. இந்த வருடம் முழுக்க இளசுகளின் லப் டப் இதுவாகதான் இருக்கும்.
வரும் 21 ந் தேதி ராஜா ரங்குஸ்கி ரிலீஸ். மர்டர் மிஸ்ட்ரி வகையை சேர்ந்த படம். சிரிஷுக்கு மெட்ரோவை போல இன்னொரு ஹிட் தயார்!