சினிமாவோட ட்ரென்ட்டையே மாத்துறோம் சார்! குறும்பட இயக்குனரின் கன்னாபின்னா ஆசை?
படம்தான் கன்னாபின்னான்னு எடுக்குறாங்க. டைட்டிலும் அப்படியே வைக்கணுமா? என்ற குரல்கள் ஒலித்தாலும் ஆச்சர்யமில்லை. ஏனென்றால் ஒரு படத்தின் பெயரே ‘கன்னா பின்னா’தான்! ‘‘ஒரு சினிமான்னா இப்படிதான் இருக்கணும்னுங்கிற ரூல்சையெல்லாம் அடிச்சு உடைக்கப் போறேன் சார்” என்று பேச ஆரம்பிக்கிறார் இப்படத்தின் டைரக்டரும் ஹீரோவுமான தியா. இதற்கு முன் கலைஞர் தொலைக்காட்சியில் பிரபலமான ‘நாளைய இயக்குனர் ’ குறும்பட போட்டியில் வென்றவர்தான் இந்த தியா.
நடுவர்களாக வந்த கே.பாக்யராஜும், சுந்தர்சியும் இவரது திரைக்கதை ஸ்டைலையும், படத்தையும் வெகுவாக பாராட்ட… குறும்படம் நெடும்படம் ஆகிவிட்டது. யெஸ்…. அந்த குறும்படத்தைதான் இரண்டு மணி நேர படமாக நீட்டியிருக்கிறார் தியா. பல ஹீரோக்கள்ட்ட இந்த கதையை சொன்னேன். இப்படியொரு கதையில் நடிக்கவே பயந்தாங்க என்கிறார் அவர். ஏன் அவ்வளவு பிரச்சனைகுரிய கதையா என்ன?
ஒரு கிராமத்து இளைஞனுக்கு சினிமா நடிகை மாதிரி ஒரு அழகியை கல்யாணம் செய்து கொள்ள ஆசை. திருச்சியிலிருந்து கிளம்பி சென்னைக்கு ஓடி வருகிறான். மாடு புல் தேடி அலைந்ததை போல படம் முழுக்க வெவ்வேறு பெண்கள் பின்னால் சுற்றி சுற்றி கடைசியில் யாரை கைப்பிடித்தான் என்பதுதான் முடிவாம். கதையில் ஒரு ஹீரோயின் இருக்கிறார். ஆனால் அவர் மட்டும் ஹீரோயின் அல்ல என்கிறார் தியா. வம்சம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த அஞ்சலிராவ்தான் ஹீரோயின்.
படத்திற்கு இசையமைத்திருப்பவர் ரோஷன் சேதுராமன், ஒளிப்பதிவு ஜெரால்டு ராஜமாணிக்கம், பாடல்கள் ஸ்ரீதர் ராமசாமி, படத்தொகுப்பு வெஸ்லி, நடனம் நந்தா, சண்டைப்பயிற்ச்சி ஜேசு, தயாரிப்பு நிர்வாகம் நாகராஜன்.
முழுக்க முழுக்க காமெடியை மட்டுமே நம்பி எடுக்கப்பட்டிருக்கும் இந்த கதை, திரைக்கு வந்த பின் தமிழ்சினிமாவின் ட்ரெண்டே மாறும் என்கிறார் தியா.
பார்ப்போம்… ட்ரென்ட் மாறுதா, அல்லது நீங்க மாறுறீங்களான்னு?
“”வம்சம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த அஞ்சலிராவ்தான் ஹீரோயின்””.
அது வம்சம் இல்லை, வன்மம்.