விஜய் பின்னால் பெரும் கூட்டம்! குழம்பிய ஏ.ஆர்.ரஹ்மான்
‘மெர்சல்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்தியது சன் டி.வி. ஒரு காலத்தில் இதே டி.வி நிர்வாகத்தால் மன உளைச்சலுக்கு ஆளானவர்தான் இந்த விஜய். கால மாற்றத்தில் அவர்களாலேயே கொண்டாடப் பட்டதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை. ஏன்? அன்றைய தினத்தை விட, இப்போது விஜய்யின் பலம் இன்னும் ஜாஸ்தி. இத்தனைக்கும் ‘மெர்சல்’ படத்தின் சேட்டிலைட் உரிமை வேறொரு டி.வி வசம் போய்விட்டது. வெறும் பாடல் வெளியீட்டு விழாவுக்கே இவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டது சன்.
நேரு ஸ்டேடியம் கொள்ளாமல் நிரம்பி வழிந்தது. அவ்வளவு கூட்டமும் விஜய்யை திரையில் காட்டும்போதெல்லாம் பேய்க் கூச்சலிட, தன்னையறியாமல் எழுந்து நின்று வணங்கினார் அவர். அபிராமி ராமநாதன் போன்ற அனுபவசாலிகள் கூட, “இந்தப்படம் ஆஸ்கர் விருதை வெல்லும் வெல்லும்” என்று வாய்கிழிய கூவியதை எந்த காதால் கேட்பதென்றே புரியவில்லை. இருந்தாலும், இசைக் கச்சேரி என்று முடிவாகிவிட்டது. ‘ஜால்ரா’ அடிப்பதை சரியா அடிப்போம் என்று நினைத்திருக்கிறார். அதை செவ்வனே செய்தும் விட்டார்.
இவர்கள்தான் இப்படி என்றால், சமத்து பிள்ளை, சண்ட வம்புக்கு போகாத பிள்ளை. தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கிற பிள்ளை ஏ.ஆர். ரஹ்மானும் ஒரு பெரிய விஷயத்தை போகிற போக்கில் கூறிவிட்டு போனார். நல்லவேளை… ஓ.பி.எஸ். ஈ.பி.எஸ் கோஷ்டிகள் ரஹ்மானின் வார்த்தைகளை கண்டுகொள்ளாமல் விட்டார்கள்.
ஆளப்பிறந்தவன் தமிழன் என்ற பாடல் ஒன்று படத்தில் வருகிறதல்லவா? அதை பற்றி பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், “அது எங்களோட அஸ்பிரேஷன். அதை நீங்க உண்மையாக்கணும்” என்றார் விஜய்யை பார்த்து! அவ்வளவுதான்… விஜய் ரசிகர்களின் எல்லையில்லாத சந்தோஷத்தாலும், ஆர்ப்பரிப்பாலும் அதற்கப்புறம் பேசிய ரஹ்மானின் வார்த்தைகள் காதில் விழுந்தால்தானே?
ஒருவேளை விஜய்யின் பின்னால் நிற்கும் அந்த பெரும் கூட்டத்தை பார்த்து ஏ.ஆர்.ரஹ்மானே மெர்சல் ஆகிட்டாரோ?
koottam punnaakku oru mayirum illai … ellorukum kaasu kuduthurukaan dr.visai