குளவியாய் கொட்டிய இறைவி! முழுசா தயாராகிட்டுதான் வருவாராம் கார்த்திக் சுப்புராஜ்!

பாரதிராஜாவுல பாதி! மணிரத்னத்தோட மீதி! என்றெல்லாம் ‘வாத்திய’ கோஷ்டிகள் வாசித்து தள்ளியதால், நாம நிஜமாகவே அப்படிதானோ என்கிற டவுட் வந்து, அதனாலேயே அவுட்டாகிப் போனவர் கார்த்திக் சுப்புராஜ். “இறைவி என்று அவர் பெயர் வச்சுட்டாரே… நாம சும்மாயிருக்கலாமா? இந்தா வச்சுக்கோ ‘மனிதி’” என்று ஒரு புது வார்த்தையை கண்டு பிடித்து தன் பங்குக்கு இம்சை கொடுத்தார் பாட்டு எழுதிய சீட்டுக்கவி ஒருவர். இப்படி ஒருவர் மாற்றி ஒருவர் கொடுத்த இம்சையால், படு பாதாளத்திற்கு போனது படத்தின் கலெக்ஷன்.

படம் படுதோல்வி என்பதையே பல வாரங்கள் கழித்துத்தான் ஒப்புக் கொண்டது இறைவி சம்பந்தப்பட்ட அனைவரின் மனசும். கலெக்ஷன் படங்களை கொடுக்கிற இயக்குனர்களுக்கே கமர்கட் கொடுத்துவிடும் தமிழ்சினிமா, படுதோல்வி படம் என்றால் சும்மாயிருக்குமா? “எல்லாரும் காஷ்மீர் பார்டர்ல சண்டையை வேடிக்கை பார்க்க போயிருக்காங்க. போயிட்டு நாலு வருஷம் கழிச்சு வர்றீங்களா?” என்று கதவை அடைக்க ஆரம்பித்துவிட்டார்கள். மனம் நொந்த கார்த்திக் சுப்புராஜ், முதல்ல நம்மளை கரெக்ட் பண்ணிக்கிலேன்னா, நம்ம குண்டு தேகத்தை வையாபுரி தேகமாக்கிட்டுதான் ஓய்வானுங்க என்று முடிவெடுத்திருக்கிறார்.

‘கேரக்டர் ஸ்டடி பண்ணணும். ஸ்கிரிட்டை இன்னும் இன்னும்னு இழைக்கணும். அதுக்கு தமிழ்நாட்ல இருந்தா சரிப்படாது. அமெரிக்கா போய்டுவோம். ஒரு மாசம் அங்கிருந்து எல்லா ப்ரி புரடக்ஷன் வேலைகளையும் முடிச்சுட்டு வருவோம்’ என்று கிளம்பிவிட்டாராம்.

ஹாலிவுட்ல திருடுவீங்களோ, பாலிட்வுட்ல பள்ளம் பறிப்பீங்களோ, மறுபடியும் ஒரு ஜிகிர்தண்டாவோட வந்தீங்கன்னாதான் பொழக்க முடியும் பாஸ்…

To listen audio click below:-

https://youtu.be/orxCw5cV4OE

 

1 Comment
  1. kumar says

    kodumai than,,, which actor going to suffer for his long thought process on making story,, definitely character going to be phsyco or ill or deeply affect by society.,.. otherwise no meaning to go america

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Kodi Audio Launch Stills Gallery

Close