கைமீறிப் போச்சே! மனசுக்குள் புழுங்கும் ஐஸ்வர்யா தனுஷ்?
திரையுலகத்தில் ரஜினி மகா சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துவிட்டார். அவரது வாரிசுகள் யாருக்கும் அந்த கொடுப்பினை இல்லை என்றாலும், மருமகன் மட்டும் வேகவேகமாக முன்னேறி வருவது சற்றே நிம்மதி தந்திருக்கிறது ரஜினி ரசிகர்களுக்கு. அப்பாவை போல பெயர் வாங்கிவிட வேண்டும் என்று சினிமா தயாரிப்பிலும் இயக்கத்திலும் இறங்கிவிட்டார்கள் மகள்கள்.
அவர் நடிக்கும் ஒரு படத்தை இயக்கிவிட வேண்டும் என்கிற ஆசை இரு மகள்களுக்கும் இருந்தாலும், இனிமேல் அதெல்லாம் நடக்குமா என்பதுதான் டவுட். ஏனென்றால் அரசியலில் கால் வைத்தால், அதற்கப்புறம் கோடம்பாக்கத்தை மறந்துவிட வேண்டியதுதான் ரஜினி. இந்த நேரத்தில்தான் அந்த சோகமான மேட்டர் வெளியே கசிந்திருக்கிறது. ஒரே ஒரு வாய்ப்பையும் கடைசி நேரத்தில் தவறவிட்டார் ஐஸ்வர்யா என்பதுதான் அது.
பவர் பாண்டி படத்தின் கதையே ஐஸ்வர்யாவுடையதுதானாம். தன் அப்பாவை நடிக்க வைத்து தானே இயக்க வேண்டும் என்று ஆசை ஆசையாக அவர் உருவாக்கிய கதை, எப்படியோ தனுஷ் கைக்கு மாறி பட்டி பார்க்கப்பட்டு ராஜ்கிரணுக்காக தயாராகிவிட்டது. இந்தக் கதையை தனுஷுக்கு கொடுப்பதை முதலில் விரும்பவே இல்லையாம் ஐஸ்வர்யா. காலத்தின் கட்டாயம். கைமீறியோ, அல்லது கை நழுவியோ போய்விட்டது அது.
அந்தப்படத்திற்காக வெளியே கிடைத்த பாராட்டும். வரவேற்பும் ஒரு படைப்பாளியாக ஐஸ்வர்யாவை ஏங்க வைத்திருப்பதாகவும் கிசுகிசுக்கிறது ஐஸ்வர்யாவின் பெயர் சொல்ல விரும்பா வட்டாரம்!
வேணும்னா எலக்ஷன் வர்றதுக்குள்ள ஓட்டுக்கு உதவுற மாதிரி ஒரு அரசியல் படம் எடுங்களேன் ஐஸ்?
https://youtu.be/VdZCEP8Ax7E
This is Fake News.