சே…தல ரசிகன் என்று சொல்லவே அவமானமா இருக்கு! போராட்ட களத்தில் முணுமுணுப்பு!

தமிழகத்தில் மாணவர் போராட்டம் வலுவடைந்துவிட்டது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியும், அமைதி வழியில் பேராட்டம் நடத்தியும் வரும் அவர்களுக்கு அரசியல் கட்சிகள் பலவும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. “எந்த அரசியல்வாதியும் உள்ளே வந்து எங்களுடன் உட்கார தேவையில்லை. பிரச்சனையை நாங்களே பார்த்துக் கொள்கிறோம்” என்று கூறிவரும் மாணவர்கள், இரவு பகல் பாராது இந்த தொடர் போராட்டத்தில் குதித்திருப்பதால், மத்திய அரசும் மாநில அரசும் சரியான நெருக்கடிக்கு ஆளாகியிருக்கின்றன.

நியாயமான இந்த போராட்டத்திற்கு சினிமா நட்சத்திரங்களும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். விஜய், சூர்யா, விக்ரம் ஆகிய மூவரும் மாணவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்திருக்கும் நிலையில், சிவகார்த்திகேயனும், லாரன்சும் போராட்ட களத்திற்கே சென்று மாணவர்களை உற்சாகப்படுத்திவிட்டு வந்திருக்கிறார்கள்.

ஆனால் இவ்வளவு எழுச்சிக்கு நடுவிலும் ஒருவரை மட்டும் தேடி வருகிறது மாணவர்களின் கண்கள். அவர்தான் அஜீத்! எப்போதுமே நாட்டில் நடைபெறும் பிரச்சனைகளுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போலவே இருக்கும் அஜீத், இந்த மிகப்பெரிய எழுச்சிக்கும் அமைதி காத்து வருவது பலரையும் எரிச்சல் அடைய வைத்திருக்கிறது. இந்த எரிச்சலை சற்று வாய்விட்டே வெளிப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள் மாணவர்கள்.

“அஜீத்திற்கு நாங்க கொடுக்கிற டிக்கெட் காசு மட்டும் வேணும். ஆனால் எங்களோட எழுச்சியை பாராட்ட மாட்டாரா? இந்த போராட்டத்திற்கு ஆதரவாக அட்லீஸ்ட் ஒரு ட்விட் கூட போட மாட்டாரா?” என்று கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். “சே… தல ரசிகன்னு சொல்லிக்கவே அவமானமா இருக்கு” என்று சிலர் போராட்ட களத்தில் முணுமுணுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கு காரணமும் இருக்கிறது. பக்கத்திலேயே அமர்ந்திருக்கிற சக மாணவர்கள், “அஜீத் அஜீத்துன்னு ஒரு மானஸ்தன் இருந்தாரே… அவரு எங்கப்பா?” என்று இவர்களை கேட்பதால், பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார்கள் அஜீத்தை நேசிக்கும் மாணவர்கள்.

இவ்வளவுக்கு பிறகும் அஜீத் அமைதியாக இருப்பது அவரது கலையுலக வாழ்கையை நாசப்படுத்தும் என்றே யூகிக்கிறார்கள் அவரது வெறிபிடித்த ரசிகர்கள்.

ரசிகர்களின் மன உளைச்சலின் சப்தம் உங்கள் காதில் விழுதா அஜீத்?

https://youtu.be/29KMUceZwyg

6 Comments
  1. முத்துக்குமரன் says

    வாழ்த்துக்கள்
    கூத்தாடிக்கு சொம்பு தூக்கியது போறும்.
    இனி தமிழ்நாட்டை படித்த பண்புள்ள நேர்மையான தமிழன் தான் ஆள வேண்டும்

  2. Dasan says

    தல, தளபதி எல்லாம் நடிகனுங்க, நடிகனுங்க. ஏன்டா இவனுங்களை எதிர் பாக்குறீங்க? அதுவும் தலைக்கு தன் படம், தன் குடும்பம், தன் சாமான் முக்கியம். நீங்கெல்லாம் அவனுக்கு முட்டாள் ரசிகன்ஸ்

  3. cujoo says

    These Tamilnadu Tamils never going to learn. In the last election, Seeman had done enough in a campaign. But what happened at the end. They voted those two parties. Why do they expect an actor to be part of this campaign? why didn’t they vote for Seeman?

  4. Rasignaa says

    Why they feel shame to tell Thala or thalapathi or surya fan? Watch movies and get torture by wasting your own money for movies like puli, sura, asal, Aalwar, maayavi etc..All the above there actors are so selfish, so greedy, they don’t care you rasigans. Why should they care? Don’t worship as GOD..these guys are cheap fellows. We do our own fight for Jallikattu.

    1. cujoo says

      Not all the actors are asked you to watch the movie. It’s all up to you. This is students protest. don’t expect any actors to participate. Those who are participating and releasing videos to gain their movie to run.

  5. சிபி சக்கரவர்த்தி says

    உன்னைய முதலில் தமிழ்நாட்டை விட்டு துரத்தணும்டா . தமிழக இலைகர்களை ஏமாற்றி பணம் பறித்த வரையில் போதும். இனி உன் ஆட்டம் எடுபடாது. உன் போலி வேஷம் கலைக்கப்படும். உன் முகத்திரை கிழிக்கப்படும். தமிழக மக்களே சிந்தியுங்கள்.
    வாழ்க தமிழகம் வாழ்க தமிழக மக்கள்
    ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
” ‘PETA’… GET OUT FROM INDIA” – Actor Vijay supports jallikattu

https://www.youtube.com/watch?v=nE605H1kSmU

Close