மோடி அறிவிப்பு! முன்னாலேயே அறிந்தாரா அஜீத்? தப்பித்தது 100 கோடி?

ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒரே உலுக்காக உலுக்கிவிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. கருப்புப்பண முதலைகளுக்கும் கண்ணீர். வெள்ளைத்துணி வியாபாரிகளுக்கும் கண்ணீர். முதலைகளுக்கு வைக்கப்பட்ட பொறியில், முயல்களும் சிக்கிக் கொண்டு ஒப்பாரி வைப்பதால், இந்த திட்டம் நல்லதா, கெட்டதா என்கிற குழப்பத்திலேயே தலைவலிக்கு ஆளாகியிருக்கிறது இந்தியா. நவம்பர் 8 ந் தேதி முன்னிரவில் அவர் அறிவித்த அறிவிப்பு படி, அன்றிரவிலிருந்தே 500 ரூபாய் நோட்டுகளும் 1000 ரூபாய் நோட்டுகளும் செல்லாது!

தமிழ்சினிமாவில் மட்டுமல்ல, இந்திய சினிமாவே கருப்புப்பணத்தை நம்பிதான் ஓடிக் கொண்டிருக்கிறது. இங்கு வட்டிக்கு பணம் கொடுக்கிற பைனான்சியர்களும் கருப்பு பணத்தைதான் கொடுக்கிறார்கள். வட்டியும் மீட்டர் வட்டி, கடப்பாரை வட்டி என்று கழுத்தை திருகி வாயில் வைத்து நசுக்குகிறது. இப்படி பேய் ஓட்டுகிற புளோட்டிங் முறையில், கஷ்ட நஷ்டம் இருந்தாலும் களிப்பும் இனிப்புமாக அதை செய்து கொண்டிருக்கிறது சினிமா பீல்டு.

சரி… மேட்டருக்கு வருவோம். கடந்த சில மாதங்களுக்கு முன் அஜீத், 100 கோடி ரூபாய் பணத்தை வெள்ளையாகவே இந்தியாவில் இயங்கும் வங்கி ஒன்றில் டெபாசிட் செய்துள்ளதாக ரகசிய தகவல் உலவுகிறது. மாதம் ஒரு கோடி வட்டி வரும். மார்க்கெட்டில் இருந்தாலும் சரி. போனாலும் சரி. இந்த ஒரு கோடி போதும் குடும்பத்திற்கு என்று அவர் இந்த முடிவில் இறங்கியதாக கூறுகிறது சோர்ஸ்.

பொதுவாகவே தனது சம்பளத்தை ப்யூர் வெள்ளையில் வாங்குகிற வழக்கத்தை பல வருடங்களாக கடை பிடித்து வருகிறார் அஜீத். முறையான வருமான வரியையும் செலுத்தி வருகிறார். மோடியின் இந்த அறிவிப்பு, அஜீத்தை பொருத்தவரை எவ்வித நடுக்கத்தையும் ஏற்படுத்தவில்லையாம். ஒரு வேளை முன் கூட்டியே இப்படியெல்லாம் நடக்கும் என்பதை அறிந்துதான் தனது சம்பள விஷயத்தை இப்படி தீர்மானித்துக் கொண்டாரோ என்னவோ?

To Listen Audio Click Below:-

https://youtu.be/N2TFBKr3Gnk

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஐயோ போச்சே! கருப்புப் பணத்தால் கதறும் நடிகர்கள்! கோடம்பாக்கத்தில் குய்யோ முய்யோ!

ஒரு பிளாஷ்பேக்! பிரபலமான அந்த பிரமாண்ட இயக்குனர் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தது வருமான வரித்துறை. தேடித் தேடி கைப்பற்றியதெல்லாம் ஏராளமான கருப்புப்பணம். பல கோடிகள் மதிப்பிலானது. பேஸ்த்...

Close