கண்டுக்காம விட்டுட்டீங்களே விஜய் சேதுபதி, அஜீத்?
சுவர் கோணலாக இருந்தால் சித்திரம் எப்படி நேராக இருக்கும்? ஆனால் சினிமாவில் மட்டும் ‘இருக்கும்’! ஏனென்றால் இங்கு சுயநலமே பொது நலம்.
ஒரு உதாரணம் ப்ளீஸ். ஒன்றென்ன? ரெண்டு இருக்கே!
ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் சிவா இயக்கி அஜீத் நடித்த வேதாளம் படத்தில் டைரக்டருக்கு லட்சக் கணக்கில் சம்பள பாக்கி. இது நன்றாக தெரிந்தும் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார் அஜீத். அதற்கு சற்றும் குறைவில்லாமல் இன்னொரு புகைச்சல். அதே ஏ.எம்.ரத்னம். ஆனால் இயக்குனர் வேறு.
விஜய் சேதுபதி நடிப்பில் ரேணிகுண்டா பன்னீர் செல்வம் இயக்கிய கருப்பன் படம், சூப்பரோ சூப்பர். ஆனால் கலெக்ஷன் விஷயத்தில் சற்றே நொண்டியடித்தாலும், யாருக்கும் கெட்டப் பெயரை தரவில்லை அப்படம். ஆனால் வழக்கம் போல டைரக்டரின் சம்பளத்தில் கை வைத்துவிட்டார் ஏ.எம்.ரத்னம். சுமார் 18 லட்சம் பாக்கி. தகவல் விஜய் சேதுபதியின் காதுக்கும் போனது. ஆனால் ஐயகோ… அவர் கண்டுகொள்ளவேயில்லை.
வேறு வழியில்லாத பன்னீர், இயக்குனர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார். விஜய்சேதுபதி… கொஞ்சம் தலையிட்டு தவிச்ச வாய்க்கு தண்ணி ஊற்றுங்க!