அஜீத் பட ஷுட்டிங்! பல்கேரியா கிளம்பியது முதல் செட்!
சந்தானம், வடிவேலுவெல்லாம் போய் இப்போது சாமிநாதன், கருணாகரன் ஆகியோர்தான் அஜீத்தின் உற்ற நண்பர்கள் ஆகப் போகிறார்கள். கிட்டதட்ட ஒரு மாதம் அஜீத்துடன் இருக்கப் போகிறார்கள் அல்லவா, வேறு வழி? அஜீத்தின் குணத்திற்கு இவர்களுக்கு எவ்வளவோ அனுபவங்கள் வாய்க்கக் கூடும். அவரே தன் கேமிராவால் இவர்களை ஸ்பெஷல் போட்டோகிராப் எடுப்பார். இந்திய உணவுகளை இவர் கையாலேயே சமைத்துக் கொடுத்தாலும் கொடுப்பார். எப்படியிருந்தாலும் பல்கேரிய பயணம் சாமிநாதன் கருணாகரனுக்கு வாரப்பத்திரிகை ஏதாவது ஒன்றில் வாசிக்கிற அளவுக்கு யோகங்களை கொடுக்கலாம்.
தல 57 படத்திற்காக பல்கேரிய கிளம்பிய முதல் செட்டில், அஜீத் இல்லை. அக்ஷராவும் இல்லை. ஆனால் இன்னும் சில நாட்கள் கழிந்தபின் இங்கிருந்து கிளம்புவாராம் அஜீத். அதுவரைக்கும் லொள்ளு சபா சாமிநாதன், கருணாகரன், படத்தில் நடிக்கவிருக்கும் துணை நடிகர்களை வைத்து படப்பிடிப்பு நடக்குமாம். ஆகஸ்ட் 2 ந் தேதி இங்கிருந்து கிளம்புகிறாராம் அஜீத்.
இந்த முதல் ஷெட்யூல் முழுக்கவே அக்ஷாரா இல்லை. ஆனால் படத்தின் ஹீரோயினான காஜல் அகர்வால் இருப்பார் என்கிறார்கள். (ஆமாம்…காஜல் அகர்வால் இந்த படத்தில் எப்படி உள்ளே வந்தார் தெரியுமா? அது பெரிய கதை. அடுத்தடுத்த பதிவுகளில்….)
Who cares. Going to stop reading your website yarlra yarlra yarlra. Ask ajith to first act
sami.. akshara act panalanu solli romba naal achuda yeppa.. ungala mathiri jalra paid media illana sathyama ajith ah ellarum marathuduvanga.. athukuthane ipdi opari vakureenga