அஜீத் படம் அக் ஷரா in
எல்லாம் சரியாகி இம்மாதம் ஷுட்டிங் கிளம்புகிறார்கள் அஜீத்தின் புதிய படத்திற்காக! படத்தில் மிக முக்கியமான கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் ஆகிவிட்டார் கமலின் இளைய மகள் அக் ஷரா. இயக்குனர் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் ஓடிக் கொண்டிருந்தவரை, ஹீரோயின் ஆக்கியவர் பிரபல இந்திப்பட இயக்குனர் பால்கி. அதற்கப்புறம் அக் ஷராவை சுற்றி சுற்றி வந்த பிலிம் இன்டஸ்ட்ரிக்கு அவர் சொன்ன ஒரே பதில்… இயக்குவதற்கு கூப்பிடுங்க. வர்றேன். ஆனால் நடிக்க கூப்பிட்டா ‘ஐ ஆம் ஸாரி’!
கரைத்தார் கரைத்தால் கல்லும் சேறாகும் என்பதை போல, அஜீத் படம் என்றதும் தன் கொள்கையை சற்றே தளர்த்தியிருக்கிறார் அக் ஷரா. ஆர்ட்டிஸ்ட் செலக்ஷன் விஷயத்தில் எப்பவும் தான் மட்டுமே முடிவெடுப்பதில்லை டைரக்டர் சிவா. இந்த கேரக்டருக்கு இரண்டு மூன்று நடிகைகளின் பெயரை அவர் எழுதிக் கொண்டு போக, அக் ஷரா என்று சொல்லியவரே அஜீத்துதானாம்.
பல்கேரியாவிற்கு அருகிலிருக்கும் ஒரு நகரத்தில் படப்பிடிப்புக்கு ஏற்பாடாகிவிட்டது. 80 சதவீதம் அங்குதான் படமாக்கப் போகிறார்களாம். இதில் இன்டர்போல் ஆபிசராக நடிக்கிறார் அஜீத்.
அக்ஷரா இல்லையாம். அதுக்கு ஒரு வடையை ரெடி பண்ணுங்கோ