வர்றீங்களா…? அமலாபாலை ஆசையோடு அழைத்த தொழிலதிபருக்கு போலீஸ் சுளுக்கு!

நடிகைகள் அருகில் இருந்தால், ஆறாம் அறிவு மட்டுமல்ல… ஏழாம் அறிவிலிருந்து ‘எழாத’ அறிவு வரைக்கும் கூட யூஸ் பண்ணி கவுக்கப் பார்க்கும் ஆம்பள சிங்கங்களில் ஒன்று நேற்று கூண்டில் அடைக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அழகேசன் ஒரு தொழிலதிபர் என்கிறது போலீஸ் வட்டாரம். புகார் கொடுத்தவர், நம்ம அமலாபால்!

ஒழுக்கம் மற்றும் இதர பிற விஷயங்களில் கட்டுக் கோப்பாக இருப்பதுடன் கவனமாகவும் இருப்பதை உணர்த்தும் விதத்தில் திண்டுக்கல் பூட்டோடு திரியும் அமலாபாலுக்கு சில தினங்களுக்கு முன் வந்த சோதனை, எந்த நடிகைகளுக்கும் வரக்கூடாத ஒன்று. ஐயோ பாவம்… அவர் மலேசியாவில் நடைபெறவிருந்த ஒரு கலை நிகழ்ச்சிக்காக டான்ஸ் பயிற்சி மேற்கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த தொழிலதிபர் அழகேசன், ‘என் பிரண்டு மலேசியாவில் இருக்கார். அவரோட டின்னர் சாப்பிட வர்றீங்களா?’ என்று அழைத்திருக்கிறார்.

இதில் இருக்கிற உள்ளர்த்தம், மற்றும் வெளியர்த்தத்தை வெகு சீக்கிரத்தில் புரிந்து கொண்ட அமலாபால், ‘அடி செருப்பால’ என்று ஏசியதுடன் போலீசிலும் புகார் கொடுத்துவிட்டார். நாதுராம் கேஸ் அளவுக்கு இதிலும் துரிதம் காட்டிய போலீஸ், சம்பந்தப்பட்ட அழகேசனை ஒரு மணி நேரத்தில் சுற்றி வளைத்துவிட்டது.

இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் அழகேசன், ‘ஏம்மா… டின்னருக்குதானே கூப்பிட்டேன்’ என்கிறாராம்.

விருந்தோம்பல் தப்பா? விருந்தோம்பல் தப்பா? விருந்தோம்பல் தப்பா? விருந்தோம்பல் தப்பா? விருந்தோம்பல் தப்பா? விருந்தோம்பல் தப்பா? விருந்தோம்பல் தப்பா? விருந்தோம்பல் தப்பா?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
யார் அண்ணன்? யார் தம்பி? வைரமுத்து நிகழ்ச்சியில் தடதடப்பு!

Close