கால் கட்டுதான் ஒரே வழி! அனிருத் விஷயத்தில் ரஜினி முடிவு!
வீட்டுக்கு அடங்குகிற பிள்ளைதான் அனிருத்! ஆனாலும் அவ்வப்போது கயிறை அறுத்துக் கொண்டு கண்டபடி மேய்வதால் ஊரெங்கும் ஒரே கெட்டப் பெயர். மைண்ட்டை ரிலாக்ஸ் பண்ணிக்கட்டும் என்று முதலில் கயிறை லூசில் விட்ட குடும்பத்திற்கு, அந்த சுதந்திரமே பெரிய அசவுகர்யம் ஆகிவிட்டது. அந்த அசவுகர்யத்தின் முதல் பிள்ளையார் சுழிதான் பீப் சாங். நல்லவேளை… அதிலிருந்து அனிருத்தை காப்பாற்றுவதற்குள் தலைவிரி கோலமாகிவிட்டார் அனிருத்தின் அப்பா ரவிச்சந்தர். மேற்படி விஷயத்தில் ரஜினியே கடுமை காட்டியதும் நடந்தது.
அதற்கப்புறமாவது மைண்ட் ரிலாஸ்சேஷன் ஒரு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்தால் அனிருத் விஷயத்தில் அதுதான் நடக்கவில்லை. மீண்டும் சிம்புவுடன் நட்பு. தனுஷுடன் பகை, நேரங்கெட்ட நேரத்தில் ஊர் சுற்றுவது என்று வருகிற தகவல் எதுவும் வாய்க்கு ருசியாக இல்லை. பொறுத்து பொறுத்து பார்த்த ரவிச்சந்தர், ரஜினியுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினாராம். இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு இதுதான்.
உடனடியாக அனிருத்துக்கு ஒரு கால் கட்டு போடுவது… விஷயத்தை மகனின் காதில் போட்ட ரவிச்சந்தர், ரஜினிதான் பெண் பார்க்கிறார் என்ற தகவலையும் சொல்ல, எவ்வித மறுப்பும் சொல்லவில்லையாம் அனிருத். “காதல் கீதல்னு எதுவும் எங்கிட்ட ஸ்டாக் இல்ல. நீங்க பார்த்து தாலி கட்றான்னா அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்ட தயார்” என்று கூறிவிட்டாராம்.
ஆசார அனுஷ்டானங்களுடன் அழகான மணமகளுக்கு வலை வீசிக் கொண்டிருக்கிறது குடும்பம். தமன்னா நிறத்துல, அனுஷ்காவின் உயரத்தில் ஒரு மஹாலட்சுமி கிடைக்க வாழ்த்துவோம். மாடர்ன் சரஸ்வதிதான் அனிருத்துக்கு பக்கத்திலேயே இருக்காளே?
To Listen Audio Click Below:-
https://youtu.be/AydGhft3BGc