ரஜினி படத்தில் அனிருத்! மூன்று வருடங்களுக்கு முன்பே சொன்ன NTC

ஸ்பெஷல் கரிசனம்… ரஜினியால் உயரும் அனிருத்! 2014 ஆம் ஆண்டு ஜுன் மாதமே நாம் எழுதிய செய்திதான் இது. https://newtamilcinema.in/rajini-lifts-aniruth/ அந்த செய்தியில் கபாலி படத்திற்கு பிறகு தனது படத்தில் அனிருத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பை வழங்கப் போகிறார் ரஜினி என்று குறிப்பிட்டிருந்தோம். அது நடந்தேவிட்டது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் புதிய படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இந்த படத்திற்குதான் அனிருத் இசையமைக்கிறார். இன்று இளைஞர்களின் உள்ளம் கவர் இசையமைப்பாளராக இருக்கிறார் அனிருத். இப்படியொரு காலம் கனியட்டும் என்று கூட காத்திருந்திருக்கலாம். ரஜினி ரெகமன்டேஷனோ, அல்லது அனிருத்தின் தனித்திறமையோ?

டாப் கிளாஸ் நிறுவனம் தயாரிக்கும் டாப் கிளாஸ் படத்தில் இசையமைக்க வந்திருக்கும் அனிருத்துக்கு இளைஞர்களின் பாராட்டு நிச்சயம்.

விவேகம் படத்தில் அனிருத் பாட்டு, அட்டர் பிளாப் ஆனதை அஜீத் ரசிகர்கள் பொறுக்க முடியாமல் கழுவி ஊற்றியதை மனதில் வைத்துக் கொண்டு ரஜினி படத்தை டீல் செய்ய வேண்டும் என்பதே நமது விருப்பம்.

கோ அஹெட் குட்டி பையா…

1 Comment
  1. Muthukumar says

    MR. ANIRUTH – ALL THE BEST
    LONG LIVE OUR GOD RAJINI

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அஜீத்தை கவிழ்க்க அத்தனைக் கூட்டம்!

Close