மீண்டும் சித்தி! அஞ்சலிக்கு திரும்புமா அந்த காலம்?
கூட்டணியில் குத்து விழுந்தால், கலெக்ஷனில் கத்தி விழும் என்பதை இவ்வளவு சீக்கிரமாக புரிந்து கொண்டாரே அஞ்சலி? அதுவரைக்கும் சுபம்! சில காம்பினேஷன்கள் எப்பவும் அப்படிதான். ஒருவர் தன்னுடன் இருக்கும் போது வருகிற வெற்றியும், புகழும் அவர் விலகிப் போன பின் வாய்க்கவே வாய்க்காது. தமிழ்சினிமாவில் அதற்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு. மேனேஜரோ, பாதுகாவலரோ, பி.ஆர்.ஓ வோ இப்படி யாரையும் எளிதில் விரட்டிவிட மாட்டார்கள் கலைஞர்கள். அப்படி விரட்டிய பின் விழுந்து வழுக்கினால், ‘எல்லாம் அவர் போனதால் வந்த சென்ட்டிமென்ட்’ என்று அஞ்சி திரும்பவும் அழைத்துக் கொள்வார்கள்.
இப்படி காக்காய்களுக்கு பிடிக்கும் என்றே வடை சுட்டு வருகிறது கலைஞர்கள் கூட்டம்! அந்தக் கூட்டத்தில் ஒருவராக மீண்டும் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. தன்னிடம் உள்ள சொத்தையெல்லாம் பிடுங்கிக் கொண்டார் என்று குற்றம் சாட்டி, அவரது சித்தியை விரட்டிவிட்டார் அல்லவா? அந்த சித்தி போனபின், செல்லாத காசாகிவிட்டது அவரது ராஜ்ஜியம்.
ஆந்திராவிலும் அல்வா. கோடம்பாக்கத்திலும் குல்லா என்றான பின், என்ன செய்வதென தவித்துப் போயிருந்தவர், மீண்டும் தன் சித்தியை அழைத்துக் கொண்டாராம். ஆனால் சில பல கண்டிஷன்களோடு. முன்பு முரண்டு பிடித்த சித்தி, இப்போது அஞ்சலியின் எல்லாவித கண்டிஷன்களுக்கும் ஆட்பட்டு தன் கூட்டணியை புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்.
காலம் இருவருக்கும் நல்ல சாம்பிராணி போட்டு சந்தோஷத்தை கொடுக்கட்டும்!
To listen audio click below:-