ஆபாச நெடி! அட்வான்சை புடி! ஏன்டா அசிங்கமா படம் எடுக்குற?
‘நல்ல படம் எடுத்தா எவன் பார்க்குறான்?’ என்கிற எண்ணத்தை உருவாக்குவதே ரசிகர்கள்தான் என்று சப்பை கட்டு கட்டலாம். அல்லது கட்டாமலும் போகலாம். ஆனால் ‘ஏன்டா தலையில எண்ண வைக்கல’ என்கிற படத்தின் சில காட்சிகளை பார்த்த நமக்கு, அடித்தொண்டை வறண்டு நுனி தொண்டை மிரண்டது நேற்று!
படத்தில் வரும் நகைச்சுவை பகுதியில் கொஞ்சத்தை திரையிட்டார்கள். அந்த கொஞ்சத்திலும் கொட்டி வழிந்தது ஆபாசம். டபுள் மீனிங் இல்லை. ஒரே மீனிங்தான். கள்ளக்காதல் பஞ்சாயத்திற்காக டி.வி நிகழ்ச்சிக்கு வரும் ஒரு லேடியும், அவரது கணவர் யோகி பாபுவும் பேசுகிற டயலாக்கை கேட்டு வயிறே கலங்கியது.
மைக்கை பிடித்த டைரக்டர் விக்னேஷ் கார்த்திக், ‘படம் முழுக்க இதுபோல காமெடிகள் இருக்கு’ என்றார். படம் ஓடுவதற்கான சுவிட்ச் இதுவாக இருந்தாலும் இவ்வளவு நேரடியாகவா சொல்லுவீங்க ப்ரோ? போய் தொலையட்டும்… படத்திற்கு ஏன் இப்படியொரு தலைப்பு?
‘கேட்டவுடனேயே எல்லாரும் அந்த தலைப்பை பற்றி பேசணும். அப்படியொரு தலைப்பு சொல்லுங்க’ என்று தனது அசிஸ்டென்ட் டைரக்டர்களுக்கு விக்னேஷ் கார்த்திக் கட்டளையிட, அவர்களில் ஒருவர் சொன்ன தலைப்புதான் இந்த ‘ஏன்டா தலையில எண்ணை வைக்கல’
அசார் என்ற டி.வி பிரபலத்துடன் சஞ்சிதா ஷெட்டி ஜோடியாக நடித்திருக்கிறார். இப்படத்தை கனடாவை சேர்ந்த சுபா தம்பி பிள்ளை தயாரித்திருக்கிறார். பணத்தை அனுப்பியது அவராக இருந்தாலும், கவனமாக அதை செலவு செய்து உருப்படியான படமாக உருவாக்கிக் கொடுத்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கை ஏ.ஆர்.ரஹைனா. அவர்தான் இப்படத்திற்கு இசையும்.
படம் முடிந்து வெளியே வரும் ரசிகர்களை ‘ஏன்டா புடிச்சு வச்சு அறுத்தீங்க’ என்று கதற விட மாட்டார்கள் என்கிற அளவுக்கு இருக்கிறது முன்னோட்டம். மிச்சத்தை திரையில் பார்த்துதான் சொல்லணும்!
ஆனால் படத்திற்கு இப்பவே அட்வான்ஸ் புக்கிங் பண்ணுவதற்கு விநியோகஸ்தர்கள் வருகிறார்களாம்.