கல்லாலும் அடிப்போம்! சொல்லாலும் அடிப்போம்! இன்னொரு ஜல்லிக்கட்டு பாட்டு!
ஜல்லிக்கட்டு விஷயத்தில் படு அப்செட் ஆகிக் கிடக்கும் தமிழ்நாட்டுக்கு சின்ன சின்ன ஆறுதல், அவர்களுக்கு தமிழுலகம் தரும் சப்போர்ட்தான். கல்லால் அடிப்பவர்கள் கல்லால் அடிக்கட்டும். சொல்லால் அடிப்பவர்கள் சொல்லால் அடிக்கட்டும் என்கிற மன நிலையோடு ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டாவை அடித்து வருகிறது தமிழுலகம். சினிமா இசையமைப்பாளர்களும் கவிஞர்களும் இயக்குனர்களும் தங்கள் பங்குக்கு செலுத்தும் விஷயங்கள் மிக மிக உணர்வு பூர்வமானவை.
அந்த வகையில் எழுத்தாளரும், கமல்ஹாசனிடம் பல்லாண்டுகள் இணை இயக்குனராக பணியாற்றியவரும், இயக்குனருமான அழகப்பன்.சி எழுத, குரு கல்யாண் இசையில் வெளிவந்திருக்கும் ‘வீரத்தமிழன்’ பாடல் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. மெலடியையும் ராப் இசையையும் குழைத்து அடித்திருக்கிறார் குரு.கல்யாண். ‘மாத்தி யோசி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆன இவர், “குருகல்யாண்மியூசிக்” என்ற நிறுவனத்தின் மூலம் தனிப்பாடல்களை ரசிகர்களுக்கு வழங்கி வருகிறார். குழந்தைகள் பாடல், வதுவை நன்மனம் எனும் கவிஞர் பழநிபாரதியின் கவிதை பாடல் என்பதை தொடர்ந்து, இந்த வீரத்தமிழன் வெளியாகியிருக்கிறது, அறிமுக பாடகி ‘யதுஸ்ரீ’ பாட, ராப் வரிகளை குரு கல்யாண் பாடியிருக்கிறார்.
காளைகளை கட்டி வைத்து அடக்கினாலும், எழுத்தில் வீரத்தை அவிழ்த்துவிடும் இவர்களை போன்றவர்கள் இருக்கிற வரைக்கும் ஜல்லிக்கட்டுக்கு அழிவேது?
இப்பாடலின் யூடியூப் லிங்க்: