பதில் சொன்னார் பாலா! தப்பு யாரு மேல சார்?
தமிழ்சினிமாவில் இதற்கு முன் இப்படி நடந்திருக்குமா, தெரியாது. எடுத்து முடித்த ஒரு படத்தை வேலைக்கு ஆகாது என்று வீசி கடாசிவிட்டு, அதே படத்தை வேறொரு இயக்குனரை வைத்து புதிதாக எடுக்கப் போகிறார்கள். ஆச்சர்யம் என்னவென்றால் அந்தப்படத்தின் இயக்குனர் ஆணானப்பட்ட பாலா… பாலா!
‘தமிழ்சினிமாவில் இதற்கு முன் இப்படி யாரும் படுத்தியிருப்பார்களா?’ என்று கேட்கிற அளவுக்கு தயாரிப்பாளர்களை சக்கையாய் பிழிந்து சாறாக துப்பி வந்த பாலாவுக்கு, ‘சாறு எது, சக்கை எது’ என்பதை காட்டிவிட்டார் ஒரு தயாரிப்பாளர். விக்ரமின் மகன் துருவ் நடிப்பில் உருவாகி இன்னும் சில தினங்களில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட ‘வர்மா’ படத்திற்குதான் இப்படியொரு அவஸ்தை.
கோடம்பாக்கத்தையும் பாலாவின் சைக்கோ ரசிகர்களையும் ஒரு சேர அலறவிட்ட இந்த செயல், யார் மீது தப்பு? என்கிற விவாதத்தை தொடங்கி வைத்தது. அது குறித்த விவாதங்கள் தொடரும் நிலையில் பாலா ஒரு விளக்கத்தை அளித்திருக்கிறார். ‘ஜனவரி 22 ந் தேதியே இப்படத்திலிருந்து தான் விலகி விட்டதாகவும், தயாரிப்பாளர் என்னை விலக்கவில்லை’ என்றும் பொருள் படுகிற ஆதாரம் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.
உண்மையில் நடந்ததென்ன? என்று நாம் விசாரித்தோம். படத்தை பார்த்துவிட்டு பெரும் அவஸ்தைக்கு ஆளான விக்ரம் குடும்பம், தயாரிப்பாளரிடம் கண்ணீர் விட, அவசரம் அவசரமாக ஒரு முடிவெடுத்தார்கள். அதுதான் படத்தை வேறொரு இயக்குனரிடம் கொடுத்து எடுக்கிற முடிவு. இதற்குண்டான செலவை தானே தருவதாக ஒப்புக் கொண்டாராம் விக்ரம்.
அதற்கப்புறம் பாலாவிடம் இந்த படத்திலிருந்து அவரே விலகிக் கொள்வதாக எழுதி அதில் கையெழுத்துப் போட்டுத் தரும்படி கேட்டிருக்கிறார்கள். அவர் முரண்டு பிடிக்கவே, எதற்கும் காத்திருக்காமல் பாலாவை நீக்கிவிட்டோம் என்று பிரஸ்சுக்கு அறிக்கை கொடுத்துவிட்டார் தயாரிப்பாளர்.
இப்போது நானேதான் விலகினேன் என்று சொல்லக் கூடிய நிர்பந்தமும் பாலாவுக்கு ஏற்பட்டிருக்கிறது.
தன்னை நம்பி வந்தவர்களை, போடா… என்று எட்டி எட்டி உதைத்து வந்த பாலாவுக்கு இது ரிப்பீட் நேரம். அவ்வளவுதான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். சாட்டை படத்தில் நடித்த யுவன் என்கிற பையனைதான் நாச்சியார் படத்திற்கு ஹீரோவாக ஒப்பந்தம் செய்தார் பாலா. சுமார் இரண்டு மாதங்கள் இந்த படத்திற்காக உயிரை கொடுத்து பயிற்சி எடுத்தார் அந்த வாலிபர். கடைசியில் ஜி.வி.பிரகாஷ் நான் இந்த படத்தில் நடிக்கிறேன் என்றதும் அந்த யுவனை அப்படியே நட்டாற்றில் விட்டுவிட்டு இவருடன் ஷுட்டிங் கிளம்பிவிட்டார். அப்படியொரு சந்தர்பவாதிதான் பாலா.
அது மட்டுமல்ல, அவன் இவன் படத்தில் நடந்தது என்ன?
முதலில் இந்தப்படத்தில் நடிக்க பாலா அழைத்தது ஜீவாவையும், அவரது அண்ணன் ஜித்தன் ரமேஷையும்தான். பாலாவை நம்பி பத்து பைசா கூட போட முடியாது. வேணும்னா பசங்க ரெண்டு பேரையும் சம்பளம் இல்லாம கூட்டிட்டு போ சொல்லு என்றார் ஆர்.பி.சவுத்ரி. இந்த கடை குளோஸ் என்பதை உணர்ந்த பாலா, அப்படியே ஜீவாவையும் ஜித்தன் ரமேஷையும் விட்டுவிட்டு விஷாலையும் ஆர்யாவையும் இழுத்துக் கொண்டு கிளம்பினார்.
இப்படி ஆசைக்காட்டி பந்தாடுவதில் பாலாவுக்கு நிகர் அவரே. அப்படியிருக்க… இப்படியொரு முடிவை அவருக்கு காலம் தந்தே தீரும்.
அஹம் பிரம்மாஸ்மி! அறம் வென்றாஸ்மி!
-ஆர்.எஸ்.அந்தணன்
பின்குறிப்பு- நாச்சியார் படத்தில் யுவன் நடிக்க ஒப்பந்தம் ஆன போது நாம் எழுதிய செய்தியின் லிங்க் இதோ- https://wh1049815.ispot.cc/balas-next-hero-sattai-yuvan/


What made bala to waive all the pending balance from E4? This clearly tells, bala is at fault? By reading the termination agreement, it seem bala made mokkai movie,?also bala was not able to justify the money he spent to make the movie? so he has to forego pending balance to be given to him by producer?
bala pavam விடுங்கய்யா. all money. 600 கோடி சொத்து இருக்கறவன் காசு வருதுன்னா கிழிஞ்ச துணி தொவைக்க ரெடி ஆயீட்டான்.