அட்லீ விஜய் படம்! நோ சொன்ன அனுஷ்கா!
வடகிழக்கு பருவ மழை, தென்மேற்கு பருவக்காற்று போன்ற மனசுல அடிக்கிற பருவகால ஜிலீர் வந்து வந்து போனாலும், அனுஷ்காங்கிற உருவ கால ஜிலீர் மட்டும், தெலுங்கு தேச எல்லையை தாண்டவே இல்லை! இஞ்சி இடுப்பழகியில் ‘பல்க்’காக பார்த்தது… அதற்கப்புறம் எல்லை தாண்டி ரோசா பொக்கே அனுப்பினாலும் நோ நோ என்று பதில் சொல்வதிலேயே குறியாக இருக்கிறார் அனுஷ்.
அனுஷ்காவுக்கும் தமிழ்நாட்டுக்கு வர மனசில்லை. அவரோடு இணைத்துப் பேசப்பட்ட ஆர்யாவுக்கும் மார்க்கெட் இல்லை. போகட்டும்… கடைசியாக அனுஷ்காவுக்கு வெற்றிலை பாக்கு வைக்காத குறையாக அழைத்து வேதனையை சுமந்து கொண்டவர் அட்லீதான் என்கிறது லேட்டஸ்ட் தகவல்கள். இவரும் விஜய்யும் இணையும் படத்தில் நடிக்க இப்போது நயன்தாரா கமிட் ஆகியிருக்கிறார் அல்லவா? அவருக்கு முன்னால் அழைக்கப்பட்டவர் நம்ம அனுஷ்காதானாம்.
ஆனால் அவரது அழைப்பை நாசுக்காக மறுத்த அனுஷ், பாகுபலி முடியுற வரைக்கும் என்னால் எந்த படமும் பண்ண முடியாது போலிருக்கு. ஸாரி என்று கூறிவிட்டாராம். அதற்கப்புறம்தான் வந்திருக்கிறார் நயன்தாரா. அதே நேரத்தில் அனுஷ்கா நினைத்திருந்தால் அவரால் கால்ஷீட் தேதிகளை ஒதுக்கிக் கொடுத்திருக்க முடியும். ஆனால் அவர் கொடுக்காமல் நழுவியதற்கு காரணமே இந்தப்படத்தில் இரண்டு ஹீரோயின்களுக்கு வாய்ப்பு இருப்பதால்தான் என்கிறார்கள் இன்டஸ்ட்ரியில்.
சரி… ஒரு விக்கெட் அவுட். நயன்தாராவுடன் நடிக்கப் போகும் அந்த இன்னொரு ஹீரோயின் யாராம். இப்போதைக்கு காஜல் என்கிறார்கள்.
நடுவுல பூந்து கிடா வெட்ற வேலையை மிக சரியாக செய்கிறார் காஜல். பொழச்சிட்டு போம்மா…
To listen Audio click below:-
https://youtu.be/NyXu_n7_WZQ