போய் வா சிஷ்யா… அனுப்பி வைத்த ஏ.ஆர்.முருகதாஸ்!
பெரிய டைரக்டர்களிடம் அனுபவம் பெற்ற உதவி இயக்குனர்களுக்கு எப்பவுமே கோடம்பாக்கத்தில் நல்ல டிமாண்ட்! அதுவும் முருகதாஸ் அசிஸ்டென்ட் என்றால், முன் தேதியிட்ட காசோலையுடன் காத்திருக்கிறார்களாம் தயாரிப்பாளர்கள். ஆனால் அங்குதான் ஒரு சிக்கல். ஏதோ படம் கிடைக்கிறது என்பதற்காக விழுந்தடித்துக் கொண்டு ஓடுகிற மாதிரி தெரியவில்லை ஒருவரும். தன் குருநாதரிடம் அட்வைஸ் கேட்கிறார்களாம்.
வந்திருக்கும் தயாரிப்பாளர் படம் எடுப்பாரா? எடுத்தாலும் ரிலீஸ் பண்ணுவாரா? பேங்க் பேலன்ஸ் விஷயத்தில் ஆள் கெட்டியா? என்றெல்லாம் விசாரித்து, தன் சிஷ்யர்களின் எதிர்காலத்திற்கு ஆபத்து இல்லை என்பதை அறிந்த பிறகுதான், நெற்றியில் திருநீறு பூசி, “போய் வா சிஷ்யா” என்று அனுப்பி வைக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அப்படி நெற்றி நிறைய ஆசிர்வாதத்தோடு வந்திறங்கியிருக்கிறார் விஜய் பாலாஜி.
டார்லிங் 2 படத்தில் ஹீரோவாக நடித்த ரமீஸ் ராஜாதான் இவர் இயக்கி வரும் விதி மதி உல்டா படத்தின் ஹீரோ! இவருக்கு ஜோடியாக ஜனனி அய்யர் நடிக்கிறார். மனிதன் கனவில் காண்கிற காட்சியெல்லாம், நிஜமாகி நேரில் வந்தால் மனுஷன் லைஃப் என்னாவது? இதை விதின்னு சொன்னால், அந்த விதியை மதியால் மாற்ற முடியுமா? முடியாதா? இதுதான் படத்தின் ஒன் லைன்! அஸ்வின் இசையமைத்திருக்கும் இப்படத்தில், நட்புக்காக ஒரு பாடலை பாடிக் கொடுத்திருக்கிறாராம் ஜி.வி.பிரகாஷ்.
தாறுமாறா ஒரு பார்வை பார்க்க
நேர்மாறா என்ன அடிச்சு தூக்க
என்பதுதான் பாடலின் வரி. கபிலன் எழுதியிருக்கும் இந்த பாடலின் வரிகள், ஜனனி அய்யரின் கண்களைதான் குறிக்கிறது.
அய்யரோட கண்ணு அவ்ளோ பவர் புல்லா இருக்குங்களா கபிலன்?
To listen the audio click below :-