‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுனின் 150வது படம் ‘நிபுணன்’

‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுனின் 150வது படமான ‘நிபுணன்’ வரும் ஜூலை 28 அன்று உலகம் முழுவதும் ரிலீஸாகவுள்ளது. இது ஒரு கிரைம் திரில்லர் படமாகும். இப்படத்தில் பிரசன்னா, வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் சுருதி ஹரிஹரன் ஆகியோர் அர்ஜூனுடன் சேர்ந்து நடித்துள்ளனர் . டீஸர் மற்றும் ட்ரைலர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘நிபுணன்’ படத்தின்  ஆடியோ ரிலீஸ் இன்று நடந்தது. புதுமுக இசையமைப்பாளர் நவீன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவரது இப்படப்பாடல்கள் மிக அருமையாக இருப்பதாகவும் , நிச்சயம் மக்களால் பெரிதும் ரசிக்கப்படும் என்று இப்படக்குழுவினர் கூறுகின்றனர். அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘நிபுணன் ‘ படத்தை ‘Passion Studios’ சார்பில் திரு.உமேஷ் , திரு. சுதன் சுந்தரம் , திரு. ஜெயராம் மற்றும் திரு. அருண் வைத்தியநாதன் இணைந்து தயாரித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
The Truth About Oviya/Namitha The Poison.

https://youtu.be/4IQDzkMJ96Y

Close