ஒரே ஒரு முத்தம்! இவ்ளோ பெரிய விவகாரமா மாறிடுச்சே?
‘தடம்’ படத்தின் பிரஸ்மீட், அருண் விஜய்க்கு நிச்சயமாக ஒத்‘தடம்’ இல்லை! இவரைப் பொறுத்தவரை இப்படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனிதான் படிக்கட்டு, லிஃப்ட், ஏணி எல்லாமே! அருண் விஜய்ன்னு ஒருத்தர் நடிச்சுட்டு இருக்காருப்பா… என்கிற நிலையை மாற்றி, வெற்றிப்பட ஹீரோ என்கிற முத்திரையை குத்திய மகா புண்ணியவான். இவர் இயக்கிய தடையற தாக்க அருண் விஜய்யை ஆகாயத்தில் வைத்துக் கொண்டாடியது.
அவர் கூப்பிட்டால் இவர் போக மாட்டாரா? அப்படி விழுந்தடித்துக் கொண்டு கால்ஷீட் கொடுத்த அருண் விஜய்க்கு, ‘தடம்’ மிக சிறப்பான அனுபவத்தை தரும் என்பதை மட்டும் நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது. நமக்கு திரையிடப்பட்ட காதல் காட்சியில் லவ்வுன்னா லவ், அப்படியொரு லவ்! காபி சாப்பிடப் போகலாமா? என்கிற ஒரு கேள்வியை வைத்துக் கொண்டு பத்து நிமிஷக் காட்சிகளை சுவாரஸ்யமாக நகர்த்தியிருந்தார். அதற்கப்புறம் வந்து விழுந்த தகவல்கள்தான் அடடா… அடடா…!
அருண் விஜய் கொடுத்த லிப் கிஸ் ஒன்றினால் ஏகப்பட்ட கேள்விகள் கேட்டார்களாம் சென்சார் ஆபிசர்ஸ். முக்கியமாக ‘லிப் கிஸ் அடிக்கிறேன்னு ஏன் அந்த பொண்ணு உதட்டை கடிச்சீங்க?’ என்று அவர்கள் கேட்டதாக பிரஸ்மீட்டில் போட்டுக் கொடுத்தார் மகிழ். இதையடுத்து ‘இல்லீங்க இல்லீங்க’ என்று சத்தியம் பண்ணாத குறையாக கதறினார் அருண் விஜய்.
முன்னாடி என் வொஃப் ஆர்த்தி வேற உட்கார்ந்திருக்காங்க. பிரச்சனையில் மாட்டி விட்றாதீங்க என்று தவித்ததே தனி கைதட்டலை குவித்தது அங்கே.
படத்தில் மூன்று ஹீரோயின்கள். நாம் யூகித்த வரை, ஆசை ஆசையாக காதலித்த பெண் இறந்து போக, கொன்றவர்களை போட்டுத் தள்ளியிருப்பார் போல ஹீரோ. கொலையாளியை தேடுகிற போலீஸ் கையில் ஆதாரத்தோடு சிக்கினாரா அவர் என்பதோடு சுபம் போடுவார்கள் என்று நம்பலாம்.
முக்கியமான மேட்டர் இன்னொன்று. முதன் முறையாக இந்தப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் அருண் விஜய். டபுள் வெற்றி குவியட்டும்…!
பின் குறிப்பு- தடம் படத்திற்காக அருண் ராஜ் என்கிற புதிய இசையமைப்பாளரை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். பாடல்களில் ரஹ்மானும் இளையராஜாவும் வழிந்தோடுகிறார்கள். தமிழ்சினிமாவின் முக்கிய இடம் இந்த இளம் கலைஞருக்கு இருக்கும். நோ டவுட்!