ஆர்யா நடிக்கும் ரெட் லைட் விளம்பரம்! வர்ற கோவத்துக்கு?

துட்டு கிடைக்கும்னா ஒரு பக்க கிட்னியை கூட கழட்டிக் கொடுக்க தயங்க மாட்டார் போலிருக்கிறது ஆர்யா. அவரது சமீபத்திய நடவடிக்கை ஒன்றுதான் ஆர்யாவின் இமேஜை தரை மட்டம் ஆக்கியிருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன் ஆர்யா வெளியிட்ட வீடியோ பதிவு ஒன்றை பார்க்காத இளசுகள் இருக்க முடியாது.

‘கல்யாணத்துக்கு பொண்ணு தேடிகிட்டு இருக்கேன். ஆனால் பொருத்தமா அமைய மாட்டேங்குது. அதனால் என்னை கல்யாணம் பண்ணிக்க விரும்புகிற பெண்கள் இந்த நம்பரில் தொடர்பு கொள்ளுங்க. உங்கள் விபரங்களை அதில் தெரிவியுங்க’ என்று கூறியிருந்தார் ஆர்யா. அதோடு விட்டிருந்தால் அவரை மனுஷன் லிஸ்ட்டில் வைத்திருக்கலாம். ‘நான் பிராங்க் பண்றேன்னு யாரும் நினைக்க வேண்டாம்’ என்றும் கூறியிருந்தார். தமிழகம் மட்டுமல்ல…. உலகத்தின் பல்வேறு மூலைகளில் இருந்தும் அந்த எண்ணை தொடர்பு கொண்ட பெண்களுக்கு, ஒரு தகவல் சொல்லப்பட்டது. இந்த இணையதள முகவரிக்குப் போய் உங்களை பற்றிய விபரங்களை அதில் பதிவு செய்ங்க என்பதுதான் அது.

அப்படி பதிவு செய்தவர்களும் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள்.

ஆனால் நிஜம் வேறு. உண்மையில் அந்த இணையதள ஐடியா, தமிழில் புதிதாக வரப்போகும் ஒரு தொலைக்காட்சியின் யுக்தி. இதிலிருந்து 20 பெண்களை தேர்வு செய்து ஆர்யாவுடன் வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பார்களாம். இந்த 20 பேரும் ஆர்யாவை இம்ப்ரஸ் செய்ய வேண்டும். அதில் யாரை பிடித்திருக்கிறதோ…. அவர்களுக்கு ஆர்யா பரிசு கொடுப்பார். (அப்ப கூட கல்யாணம் பண்ணிக்க மாட்டார்)

ஆர்யா நடித்த ரெட் லைட் விளம்பரம்னு வெளிப்படையா சொல்லுங்களேன்டா…. எதுக்கு சுற்றி வளைக்கிறீங்க?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஒரு இளவரசியாக வாழ விரும்புகிறேன்! அண்ணாதுரை நாயகி சம்பிகா

வருகின்ற 30 ஆம் தேதி வெளி வர இருக்கும் "அண்ணா துரை" தலைப்பில் துவங்கி , எல்லா அம்சங்களும் மக்களின் எதிர்பார்ப்பை கூட்டும் படமாகவே இருந்து வருகிறது....

Close