55 நாடுகளில் பைரவா ரிலீஸ்! படத்தில் இன்கம்டாக்ஸ் ரெய்டு சீன் இருக்குதாமே?
பல வெளிநாடுகளில், பொங்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே வரப்போகும் ‘பைரவா’ படத்தின் முன் பதிவை இப்போதே தொடங்கிவிட்டார்கள். அதுவும் அமெரிக்கா போன்ற நாடுகளில் சுளையாக குவிந்து வருகிறதாம் கலெக்ஷன்.
தமிழ்நாட்டை பொருத்தவரை ஓப்பன் பண்ணிய ஒரு சில நிமிஷங்களிலேயே இன்டர்நெட் சேவையின் பைபர் கேபிளே சூடாகிற அளவுக்கு டிராபிக் ஜாம் ஏற்படுத்துவார் விஜய். இப்பவும் அதற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கிடையில் வெளிநாட்டு ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள்தான். இவர்கள் பைரவா பார்ப்பதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன் வெளிநாட்டு ரசிகர்கள் பார்த்துவிடுவார்கள் என்பது தெரிந்த விஷயம்தானே? அதிருக்கட்டும்… இதுவரை தமிழ்சினிமா வரலாற்றிலேயே இல்லாதளவுக்கு மொத்தம் 55 நாடுகளில் திரையிடப்படுகிறது பைரவா.
தமிழ்நாட்டை பொருத்தவரை பண மதிப்பு நீக்க கொள்கைக்குப் பின் எல்லா தொழிலும் இம்சைக்கு ஆளாகியிருக்கிற நிலையில், பைரவா வந்து அந்த சலசலப்பை உடைக்கும் போல தெரிகிறது. எல்லாம் சரி… படத்தில் பண மதிப்பு நீக்க விஷயத்தையும், பெரிய இடங்களில் இன்கம்டாக்ஸ் ரெய்டு நடப்பதையும் கூட காட்சியாக சேர்த்திருக்கிறாராம் டைரக்டர் பரதன்.
ஆக, விஜய்யையும் அரசியலுக்குள் கோர்த்துவிட்டுவிட்டார் பரதன் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்!