பாலாவிடம் சிக்கிய கொலைகாரன்! ஹீரோ நம்ம ஜி.வி.பிரகாஷ்தான் தெரியுமா?

உச்சி வெயிலில் நிக்க வச்சு, உள்ளங்காலில் தீ மூட்டினாலும், “இது பாலா படம்டா. சாவேண்டா… நல்லா சாவேண்டா…” என்று வெறிபிடித்த மாதிரி கஷ்டப்படுவதற்கு கோடம்பாக்கத்தில் முன்னணி ஹீரோக்கள் கூட தயார். விக்ரம், சூர்யா, அதர்வா, ஆர்யா என்று இதற்கு முன் வறுபட்ட ஹீரோக்கள் லிஸ்ட்டில் தன்னையும் நேற்று முதல் இணைத்துக் கொண்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

வாழை இலையை வதக்கி, அதை அந்த வாழை இலையிலேயே வைத்து பரிமாறி வரும் டைரக்டர் பாலா, மேலும் ஒரு அடிமை சிக்கிட்டாண்டா… மனப்பான்மையுடன் நடந்து கொள்வாரா? அல்லது வழக்கத்திற்கு மாறாக மென்மையாக நடந்து கொள்வாரா என்கிற டவுட்டுக்கெல்லாம் இடமே இல்லை. ஏன்?

கதை அப்படி! சுமார் 30 வருடங்களுக்கு முன் தன் அக்காள் மற்றும் நெருங்கிய உறவினர்களையும் பஞ்சிளம் குழந்தைகளையும் சேர்த்து ஒரே நேரத்தில் ஒன்பது கொலை செய்து ஆயுள் தண்டனை அனுபவித்துவிட்டு வெளியே வந்த ஜெயப்ரகாஷ் என்பவரின் கதையைதான் படமாக எடுக்கப் போகிறாராம் அவர். இந்த கொலை சம்பவம் நடந்த இடம் விருகம்பாக்கம்.

தற்போது வெளியே வந்தாலும், யாருக்கும் தன் முகம் தெரியாதளவுக்கு குழந்தை குட்டிகளுடன் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார் அந்த முன்னாள் குற்றவாளி. பாலா அவரை சந்தித்தாரா? அல்லது சந்திக்காமலே இந்த கதையை உருவாக்கினாரா என்பதையெல்லாம் துருவி துருவி தேடினால் விடை கிடைக்கக் கூடும்.

சுருக்கமாக சொன்னால் ஜெயப்ரகாஷ் பாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ். என்ன பொருத்தம் இப்பொருத்தம்?

https://youtu.be/1oKb86dzr5Q

2 Comments
  1. Rajini says

    intha pinchu pona rubber moonjikku ithellam thevaiya

  2. shakthi says

    video version pasura slang and modulation innum bettera irutha katka nalla irukum

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
புளோர் மட்டும்தான் துடைக்கல… மற்றதெல்லாம் செஞ்சேன்! அருண் விஜய் எமோஷனல்

https://www.youtube.com/watch?v=94CgpH5uEzw

Close