எச்.ராஜாவை மிஞ்சிய பாரதிராஜா! என்னென்னவோ நடக்குது நாட்ல!

‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’ என்பதை எச்.ராஜா நிரூபித்தது ஒருபுறம் என்றால், நாங்க மட்டும் சும்மாவா என்று இன்னொரு கூட்டமும் கிளம்பிவிட்டது. தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் வணங்கும் ஆண்டாள் பற்றி, அதே ஊரில் நின்று வைரமுத்து சொன்ன ஒரு கருத்து நாட்டில் புயலை கிளப்பிவிட்டு முழுசாக மூன்று நாட்களாகிவிட்டது.

பெருமாளை விமர்சித்தாலும் தப்பு. பெரியாரை விமர்சித்தாலும் தப்பு. அடுத்தவர் நம்பிக்கையை கொச்சை படுத்தாமல் அவங்கவங்க வேலையை அவங்கவங்க பாருங்கப்பா என்று நடுநிலை வகிக்கும் ஆன்மீக நம்பிக்கையாளர்களுக்குதான் அநியாயத்துக்கு தர்ம சங்கடம்.

இந்த பிரச்சனை இன்றோடு ஓய்ந்துவிடாதா என்று அதே ஆண்டாளிடம் ஒரு கூட்டம் வேண்டிக் கொண்டிருக்க… தன் பள பள வாளை நீட்ட ஆரம்பித்துவிட்டார் பாரதிராஜா. ‘நாங்கள்லாம் முரட்டுக் கூட்டம். திரும்பி ஆயுதம் எடுக்க வச்சுராத…’ என்று எச்.ராஜாவை அவர் மிரட்டியது பலருக்கும் உற்சாகம்தான். காரணம்… அவர் எச்.ராஜாவை திட்றாரே… என்பதாக இருக்கலாம். மோசமான பாடி லாங்குவேஜ். அதைவிட மோசமான வார்த்தைகள் என்று எச்.ராஜா ஒரு ஆள் போதும். இன்னும் 100 வருஷங்களுக்கு தமிழ்நாட்டில் பி.ஜே.பி யை தலையெடுக்க விடாமல் செய்ய. அது புரியாமல் இவரை இன்னும் மேலிடம் சும்மா விட்டு வைத்திருக்கிறதே என்கிற ஆதங்கமும் இருக்கிறது ஜனங்களுக்கு. இந்த நேரத்தில் பாரதிராஜாவின் பேச்சு சிறப்புதான். ஆனால் இப்படி பேசி எச்.ராஜாவுக்கு இணையான நபராக மாறிவிட்டாரே என்பதுதான் அதிர்ச்சி.

இதற்கிடையில் கோடிக்கணக்கான பக்தர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதற்காகவாவது வைரமுத்து வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும். அதுதான் அவரது அறிவுக்கும் மொழிப் புலமைக்கும் அழகு. அதை விட்டு விட்டு, இன்னமும் அமைதி காப்பது தேவையில்லாத குழப்பங்களைதான் நாட்டில் விளைவிக்கும்.

சண்டையை மூட்டிவிட்டு அதில் குளிர் காய்பவர்களை மட்டும் எந்த ஆண்டாள் வந்தாலும் எந்த பெரியார் வந்தாலும் திருத்த முடியாது. அதற்கு இடம் கொடுக்காதீர்கள் கவிப்பேரரசு அவர்களே…

கீழே பாரதிராஜாவின் அறிக்கை-

BharathiRaja

3 Comments
 1. பிசாசு குட்டி says

  டை மண்டு
  நன்றாக எழுதிய காலம் மலையேறிவிட்டது.. இறுமாப்பு கர்வம் உதாசீனம் மிதமிஞ்சிய அகங்காரம் போன்றவை அவரது அறிவை அழித்துகொண்டிருக்கிறது..
  சேர்ந்த இடம் சரியில்லை.. மேலும் இப்போதைய காலத்துக்கு டைமண்டு தேவையில்லை..
  ஆண்டாளை பற்றி அவருக்கு தெரிந்ததெல்லாம்.. தடமுலைகள்.. (இந்த வார்த்தைக்கு மன்னிக்க – நான் கேட்டு விட்டேன்.. டைமண்டு எப்போ கேட்பார் ?? )

  டைமண்டுவின் பாடல்களை பொருள் கொண்டு விளக்க ஆரம்பித்தால்.. அது காம புத்தகத்தை தோற்கடிக்கும்.. அமெரிக்காவே சொல்லிவிட்டது என்றால் டை மண்டுக்கு எங்கு போனது புத்தி

 2. Arivu Selvan says

  அந்த பக்கம் ராஜா அநாகரீகமா பேசினா, பாரதி ராஜா வெட்டுவேன்னு உண்ர்ச்சி பொங்க பேசி இந்த பக்கம்மும் தூண்டிவிடுகிறான். பாரதி ராஜாவுக்கு வயசாயிடுச்சு, வெட்டி கிழிக்க முடியாது. அதுனால ஊரான் மவனை காவு கொடுக்காம தன் மவனை (manoj) வெட்ட அனுப்புவாரா? இல்ல, மாட்டான். மக்களே, விழித்து கொள்ளுங்கள். ரெண்டு பக்கமும் தப்பு இருக்கிறது. So, ignore both sides, just focus in your own life, family and work.

  1. Naren says

   Are you saying Mr. Manoj K. Bharathi?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
காதலா? நட்பா? பட்டிமன்றம் போல ஒரு சினிமா

அருள்மிகு ராம ஆஞ்சநேயா மூவிஸ், தங்கம்மன் மூவிஸ், செரா பிக்சர்ஸ் ஆகிய மூன்று பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் “ டீக்கடை பெஞ்ச் “ இந்த...

Close