பிக்பாஸ் ஓவியா பேரம் ஸ்டார்ட்ஸ்!

அடிக்கிற காற்றில் மேகம் பறக்கலாம். நிலா பறக்கலாமோ? எவ்வித முன்னெச்சரிக்கையுமின்றி நிலாவை தவற விட்ட பிக்பாஸ்க்கு, நாளெல்லாம் வெறுங்கூத்து!

யெஸ்… விஜய் டி.வி யின் ‘பிக் பாஸ்’ நிலவரம் படு மோசம் ஆகியிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் பார்வையாளர்கள் மளமளவென சரிந்து வருவதாக தகவல் வர வர… ஓவியாவை மீண்டும் உள்ளே கொண்டு வரும் ஒரே முயற்சியில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறதாம் சேனல்.

தினந்தோறும் இரண்டு லட்சம் சம்பளம் என்ற கணக்கில்தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக உள்ளே போனார் ஓவியா. நிகழ்ச்சியின் மொத்த பிடியையும் தன் கைக்குள் கொண்டு வந்த ஒவியா, மன ரீதியாக பாதிக்கப்பட்டு ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டார் அல்லவா? அதற்கான செலவை கூட தானே ஏற்றுக் கொள்வதாக முன் வந்ததாம் டி.வி நிறுவனம். இப்படியாக ஓவியாவுடன் தொடர் ‘டச்’சில் இருக்கும் நிறுவனம், மீண்டும் அவரை உள்ளே இழுக்கும் முயற்சியில் அரை கிணறு தாண்டியிருக்கிறது. இன்றைய நிலவரப்படி, தினந்தோறும் ஐந்து லட்சம் வரை தர முன் வந்திருக்கும் டி.வி க்கு, ஓவியாவிடமிருந்து உடனே பதில் கிடைக்கவில்லை என்பதுதான் பேரதிர்ச்சி.

தொகை மேலே மேலே சென்று, பத்து லட்சத்தை தொட்டால் ஒரு வேளை ஓவியா உள்ளே வருவாரோ, என்னவோ?

அடிச்ச சரக்கு இறங்கிருச்சா ஆர்மி கைய்ஸ்…?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பிரபுதேவா கோபம் நியாயம்தான்! அதற்காக இப்படியா செய்யணும்?

Close