முடிஞ்சா கண் சிமிட்டிப் பாரு… சவால் விடும் ரெஜினாவின் கவர்ச்சி!
அப்பாவும் மகனும் இணைந்து நடிப்பதென்பது ஒரு வரம்! அதை இதற்கு முன் சாத்தியமாக்க நினைத்த பலருக்கு வந்ததே ஜுரம்! ஏன்?
நவரச நாயகன் கார்த்திக்கின் கால்ஷீட் வாங்குவதென்பது ரொம்பவே கஷ்டம். மகன் கவுதம் கார்த்திக்குடன் அவர் இணைந்து நடித்தால் எப்படியிருக்கும் என்கிற எண்ணத்தை இந்த ஒரு விஷயத்தாலேயே ஊற்றி மூடிய இயக்குனர்களுக்கு மத்தியில், “அந்த பொறுப்பு உங்களுக்குதான். செஞ்சு கொடுங்க சார்” என்று கிடுக்கிப்பிடி போட்டுவிட்டார் ‘மிஸ்டர் சந்திரமவுலி’ பட இயக்குனர் திரு. அதை ஒரு சவாலாகவே எடுத்துக் கொண்டு கார்த்திக், கவுதம் பேமிலியை அணுகிய தயாரிப்பாளர் தனஞ்செயன் வெற்றிக்கனியோடு வர… 45 நாட்களில் பரபரவென முடிந்தது படம்.
கதையிலேயும் இதே பரபரப்பு இருக்கும் என்றார் டைரக்டர் திரு. பிரசாத் லேபில் நடந்த இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சியில், பலரையும் சேலம் சித்த வைத்தியர் வசம் அனுப்புகிற வேலையை கச்சிதமாக செய்தார்கள். ரெஜினாவும் கவுதம் கார்த்தியும் நீச்சல் குளத்தில் விழுந்து புரளும் பாடல் ஒன்றை திரையிட்டார்கள். ஏற்கனவே யு ட்யூபில் இப்பாடல் வெளியாகி மூன்று மிலியன் ரசிகர்களை கண்ணார கண்டு மனசார ருசிக்க வைத்துவிட்டது. அதே பாடல் இங்கே. அதுவும் 4கே ரெசொல்யூஷன் டெக்னாலஜியுடன் அமைந்த அகன்ற திரையில். எப்படியிருக்கும்!
நிகழ்ச்சிக்கு வந்திருந்த ரெஜினாவே சற்று வெட்கத்துடன் மேடை ஏறுகிற அளவுக்கு கிறுகிறுக்க வைத்துவிட்டது அப்பாடல். இப்படியொரு பாடல் காட்சியில் நடிக்க முதலில் யோசித்தாராம் ரெஜினா. நடன இயக்குனர் பிருந்தாதான் அவரை கன்வின்ஸ் செய்தாராம்.
ரெஜினாவுக்கு வைக்கப்பட்ட கேமிரா கோணங்களும், வளைவு நெளிவுகளை வாரி வழங்கிய ஒளிப்பதிவும், அவ்வளவையும் நடத்திக் காட்டிய அந்த நீச்சல் குளமும் பரவசம்யா பரவசம்! இந்த பாடல் காட்சியை பார்க்கும் ரசிகர்கள் யாராவது கண் சிமிட்டினால் அவருக்கு ஒரு கோடி பரிசுன்னு கூட அறிவிக்கலாம்.
எவனாவது கண் சிமிட்டுவான்றீங்க?