கமல் சார்… உங்க வீட்டுக்கு போங்க! மனசுக்குள் அழும் சேனல்!

கமல் என்கிற மத யானையின் முதுகில் பயணம் செய்ய நினைக்கும் அத்தனை பேருக்கும் ஆபத்தும் உண்டு. அசர வைக்கிற சவாரியும் உண்டு. கொஞ்சம் உஷாராக இல்லாவிட்டால், தொல்லை நிச்சயம். ஆளவந்தான் படத்தில் தான் அனுபவித்ததை நாடு முழுக்க கேட்கும்படி புலம்பிவிட்டார் தாணு. விஸ்வரூபம் விஷயத்தில் குத்து பட்ட இடத்தில் பத்து போட்டு படுத்தே கிடக்கிறார் ஆஸ்கர் ரவி. இப்படி ஓடியாடி விளையாடும்போதே ஓங்கி குத்துவிடுகிற அளவுக்கு இம்சை தருவது கமல் ஸ்டைல். தெரிந்தே பிளாஸ்த்ரி போட்டுக் கொள்ளும் நிறுவனங்களில் இப்போது முதலிடத்தில் இருக்கிறது பிக் பாஸ்.

ஒரு சின்ன சாம்பிள்தான் இது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிஸ்கஷனுக்காக சென்னையிலிருக்கும் பிரபல நட்சத்திர ஓட்டலில் பிரமாண்டமான ரூம் போட்டுக் கொடுத்தார்களாம் கமலுக்கு. வாரத்திற்கு இரண்டு நாட்கள் கூடி, நிகழ்ச்சி குறித்து விவாதிப்பதாக திட்டம். ஆனால் அந்த அறைக்கு குடி வந்த நாளிலிருந்து இன்று வரை ஓட்டலை காலி செய்வதாக இல்லையாம் கமல். வீட்டிற்கு போவதையே நிறுத்திவிட்டாராம். தினந்தோறும் வருகிற பில், நெஞ்சை பதற வைப்பதாகவும் இருப்பதால் சொல்லாமல் கொள்ளாமல் முழிக்கிறதாம் சேனல்.

மலையை கட்டி இழுக்கும் போது மசில்ஸ் அங்கங்க வலிக்கதானே செய்யும்?

https://youtu.be/f-mGiDgpER0

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சினிமா காட்சியை வெளியிட்ட நிஜ போலீஸ் அதிகாரி

Close