சாக்கோபார் விமர்சனம்
யேய்… நாங்கள்லாம் பார்க்காத பேயா, பிசாசா, பில்லி சூனியமா? என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு தியேட்டருக்குள் போனால், “பேயா அது? பிரமாதம்யா…” என்று நெஞ்சை குழைத்து, பஞ்சை நனைத்து ஒஹோ என்று ஜொள்ளாபிகேஷம் செய்கிறான் அதே ரசிகன். எல்லாம் படத்தில் வரும் அந்த பெண் செய்த மாயம். யாருய்யா அது? யாரோ மனஸ்வினியாம்! 32 – 28 – 32 என்கிற விகிதாச்சாரத்தில் போட்டு இம்சிக்கிறார். பேயே நேர்ல வந்து ‘போதும்டா சாமீ’ன்னாலும், தியேட்டரை விட்டு எழுமா உடம்பு? 18 ப்ளஸ்கள் கூட்டங் கூட்டமாக தியேட்டருக்கு போனால், பல வித்தைகள் காத்திருக்கிறது கண்களுக்கு!
பெரிய்…ய பங்களா! அமானுஷ்ய இருட்டு! எங்கிருந்தோ நாய் ஓலமிடும் சப்தம்! மங்கிய வெளிச்சத்தில் மர்ம பேய்களின் நடமாட்டம்…. இவ்வளவுக்கும் நடுவில் ஒருத்தி தூங்க வேண்டும் என்றால், தூக்கமா வரும்? தூங்க முயற்சிக்கிறாள் அவள். யார் அவள்? ஏன் அந்த பங்களாவில் அவள் மட்டும் தனியாக?
அந்த கேள்வியெல்லாம் மண்டையில் உதிக்க விடாமல் செய்த விதத்தில் மார்க்கை அள்ளுகிறார் இப்படத்தின் இயக்குனர் ராம்கோபால் வர்மா. அவரது செல்வாக்கை வைத்து வெறும் இரண்டு லட்ச ரூபாயில் எடுக்கப்பட்ட இந்த படம், நாற்பது கோடிகளுக்கு மேல் வசூல் செய்து தெலுங்கு இன்டஸ்ட்ரியை பதை பதைக்க விட்டதாக சொல்கிறார்கள். அந்த பங்களா வாடகையே தினத்துக்கு இரண்டு லட்சம் வருமே என்ற டவுட்டெல்லாம் நமக்கெதுக்கு? கண்ணு புல்லா நிறைஞ்ச மனஸ்வினியின் நடிப்பு பற்றி அலசுவோமா?
காதலன் நவ்தீப் ‘துணைக்கு படுத்துக் கொள்ளவா?’ என்று கேட்ட பின்பும், ‘ம்ஹும்… நீ போ’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் போய் கதவை சார்த்திக் கொள்கிறார் மனஸ்வினி. அதற்கப்புறம் படம் முடிகிற வரைக்கும் கூட அவர் செய்வது ஒரே செயல்தான். போய் படுக்கையில் விழுவதும், யாரோ கதவை தட்டுகிற சத்தம் கேட்டு அப்படியே முன்னழகு தெரிய, பின்னழகு வழிய நடந்து நடந்து நடந்து நடந்து நடந்து வந்து கதவை திறப்பதும், பின் ஒருவருமில்லை என்று திரும்பிப் போவதும்தான் அந்த ஸ்கிரின் பிளே. (அது ஸ்கிரின் பிளேவா, இல்ல ‘ஸ்கின்’ பிளேவா சார்?) அவர் எத்தனை முறை குளிக்கிறார். குளிப்பதற்கு முன் எத்தனை முறை இன்னர்வேர், டாப்ஸை அவிழ்க்கிறார் என்று ஒரு போட்டி வைத்தால், தடுமாறிப் போவான் ரசிகன்.
படத்தின் கலெக்ஷனில் பாதி போய் சேர வேண்டியது இந்த மனஸ்வினிக்கும், அவரை விதவிதமாக தன் கேமிராவில் சுட்டுத்தள்ளிய ஆஞ்சிக்கும்தான்! இது எந்த வகை கேமிரா என்பதையும், எந்தெந்த கோணங்களில் எல்லாம் அதை செட் பண்ணலாம் என்பதையும் அவர் ஒரு பொதுக்கூட்டம் போட்டு விளக்கினால் கூட, பலரது சந்தேகம் தீராது போலிருக்கிறதே?
படத்தின் ஹீரோ நவ்தீப். ஹீரோயினை மட்டும்தான் இப்படி அரை டவுசரில் அலைய விடுகிறார்கள் என்று பார்த்தால், இவரையும் கூட அப்படிதான் அலைய விடுகிறார் இயக்குனர் ராம் கோபால் வர்மா. “எங்க பேய் இருக்கு. காட்டு?” என்று வீராப்பாக வருகிற நவ்தீப், அதற்கப்புறம் விட்டால் போதும் என்று அஞ்சி உருள்வதெல்லாம் திகில் பிகில் சமாச்சாரம்.
அப்புறம் படத்தில் வேலைக்காரி என்றொரு ஐட்டம் வருகிறது. ஹைய்யோ…. அந்த பெண்ணின் கண்ணுக்கே நாலு பக்கம் டயலாக் எழுதலாம் போல. ஒரு சிறுவன், ஒரு கிழவி, ஒரு பிரமாண்டமான பியானோ என்று சிற்சில ஐட்டங்களை வைத்துக் கொண்டு மிரட்டோ மிரட்டென மிரட்டுகிறார் ஆர்ஜிபி.
பேய்க்கு அஞ்சும் மனஸ்வினியே ஒரு பேய்தான் என்பதாக கதை முடிய, “என்ன ஒரு திருப்பம்டா?” என்று வியந்தபடியே வெளியேறுகிற நபர்களில், அடுத்த ஷோ டிக்கெட்டுக்காக ரிப்பீட் அடிப்பவர்கள் பாதி பேருக்கு குறையாமலிருப்பார்கள்.
எல்லாம் ‘அவள்’ செயல்!
-ஆர்.எஸ்.அந்தணன்
To listen this news in audio click below ;-