பெண் எழுத்தாளருக்கு ஆபாச வீடியோ! பிரபல சினிமா எடிட்டருக்கு விஷால் லெஃப்ட் ரைட் குத்து!
சினிமாவில் பணியாற்றும் பெண்கள் தங்களுக்கென ஒரு அமைப்பை உருவாக்கி சில நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள் இப்படியொரு நியூஸ். சம்பந்தப்பட்ட அமைப்பு தானாக வந்து விசாரிக்கிறதோ, இல்லையோ? விஷயத்தை கேள்விப்பட்ட விஷால் கேட்காமலே என்ட்ரியாகி, செக்ஸ் டார்ச்சர் கொடுத்த நபரை நேரில் வரவழைத்து லெஃப்ட் ரைட் வாங்கிவிட்டார். அது ஒரு கொடுமையான சம்பவம்.
தேசிய விருது பெற்ற படம் ஒன்றில் எடிட்டராக பணியாற்றிய நபர் அவர். ‘பிரேம் பை பிரேமாக’ செதுக்குகிற அளவுக்கு எடிட்டிங் விஷயத்தில் கில்லாடி. அப்படிப்பட்ட நபருக்கு, அவமானம் ஆன்ட்ராய்டுக்குள் ஏறி வந்தது. தான் பார்த்த ஆபாச வீடியோக்களை சமூகம் மதிக்கக்கூடிய ஒரு பெண்மணிக்கு அனுப்பி, ஆழம் பார்த்திருக்கிறார். எதிர்முனை அமைதி காத்தால் அடுத்த பிட்டை போடலாமே என்பதுதான் அவரது ஐடியா.
குற்றம்… நடந்தது எப்படி?
தான் இயக்கப் போகும் ஒரு புதிய டெலிபிலிமுக்கு எடிட்டராக பணியாற்ற அழைத்தாராம் அந்த பெண் எழுத்தாளர். எடிட்டிங் குறித்து இரண்டே சந்திப்புகள்தான் நடந்திருக்கிறது. ஒரு நாள் இரவு, தன் ஆன்ட்ராய்டு போனிலிருந்து அந்த பெண் எழுத்தாளருக்கு சில பல போர்னோ பிலிம்களை தட்டிவிட்டுவிட்டார் இவர். அதிர்ச்சிக்கு ஆளான அந்த பெண்மணி, இவரை போனில் அழைத்து, ‘இந்த வேலயெல்லாம் எங்கிட்ட வேணாம். செருப்பு பிஞ்சுரும்’ என்று எச்சரித்திருக்கிறார். அதற்கப்புறம் மனம் அமைதியுறாத பெண்மணி, தனது பேஃபுக்கில் தன் மனக்குமுறலை கொட்டித் தீர்த்துவிட்டார். அவ்வளவு கொடூரத்திலும் அந்த நபரின் பெயரை அவர் எழுதவே இல்லை.
யாரோ சொல்லி இந்த தகவலை அறிந்த விஷால், நேரடியாக எழுத்தாளருக்கே போன் அடித்தாராம். “யாருங்க அது? சொல்லுங்க. நான் பார்த்துக்குறேன்” என்று சொல்ல, எழுத்தாளரும் சம்பந்தப்பட்ட நபரின் பெயரை சொல்லியிருக்கிறார். அதற்கப்புறம் அந்த எடிட்டரை நேரில் வரவழைத்த விஷால், காதே கூசுகிற அளவுக்கு அர்ச்சனை செய்து அனுப்பி வைத்தாராம்.
சினிமா சரியானது இல்லைதான். அதற்காக சினிமாவுக்கு வர்ற பெண்கள் எல்லாம் தப்பானவங்க இல்லை. இது அந்த எடிட்டருக்கு மட்டுமல்ல, இந்த செய்தியை படிக்கிற எல்லாருக்கும் புரியணும்! அது ரொம்ப முக்கியம்.