தமிழனின் புகழை அழிக்கும் முயற்சி! தொல்பொருள் துறைக்கு டைரக்டர்கள் அமீர், கரு.பழனியப்பன், கண்டனம்!

சிவகங்கை மாவட்டத்திலிருக்கும் கீழடி என்ற ஊர்தான் கடந்த சில வாரங்களாக தலைப்புச் செய்தி! ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அழகழகான வீடுகளை கட்டி நாகரீத்தின் உச்சத்தில் வாழ்ந்திருக்கிறான் தமிழன் என்பதற்கான ஆதாரங்கள் அந்த கீழடி கிராமத்தில் கிடைத்திருக்கிறது. பண்டைய தமிழன் பயன்படுத்திய அற்புதமான பொருட்களும் கிடைத்திருக்கின்றன. இதன் மூலம் உலக நாகரீகத்தின் முதல் மனிதனாக திகழ்ந்தவன் தமிழன் என்ற உண்மையும் புலப்பட்டிருக்கிறது.

இந்த தொல்பொருள் ஆராய்ச்சியில் கிடைத்த பொருட்களை, அதே ஊரில் ஒரு மியூசியம் அமைத்து காட்சிக்கு வைக்க முன் வராத தொல்பொருள் துறை, அந்த பொருட்களை மைசூருக்கு கொண்டு சென்று வைக்க முடிவெடுத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, மேலும் இந்த ஆராய்ச்சியை தொடர மனசில்லாமல் அரைகுறையாக நிறுத்திவிட்டு கிளம்பும் முயற்சியையும் மேற்கொண்டுள்ளது.

இதையடுத்து கீழடிக்கு சென்ற டைரக்டர்கள் அமீர், கரு.பழனியப்பன், ஜனநாதன் ஆகிய மூவரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்கள். “தமிழனின் பெருமையை அழிக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டை இழந்தோம். காவிரியை இழந்தோம். இப்போது நாகரீகத்தின் அடையாளமாக தமிழன் விளங்கியிருக்கிறான் என்கிற பெருமையயும் குழி தோண்டி புதைக்கும் முயற்சி நடக்கிறது. இங்கிருந்து கிடைத்த பொருட்களை இங்கேயே காட்சிக்கு வைக்க வேண்டும். அதற்கு இரண்டு ஏக்கம் நிலம் வேண்டும் என்று காரணம் சொல்லியிருக்கிறது தொல்பொருள் துறை. அந்த இரண்டு ஏக்கர் நிலத்தை எங்கள் இயக்குனர் சங்கமே கூட தர தயாராக இருக்கிறோம்” என்று அமீர் ஆவேசமாக கூறினார்.

ஹ்ம்… தமிழனின் குரல் எப்போது டெல்லி வரைக்கும் கேட்டிருக்கிறது, இப்போது கேட்க?

To Listen Audio Click Below:-

https://youtu.be/zi1RmgGH4Jo

1 Comment
  1. poker lounge says

    Good day very nice site!! Guy .. Excellent .. Superb ..
    I will bookmark your website and take the
    feeds additionally? I am glad to find so many helpful information here in the submit, we’d like work out extra strategies on this regard,
    thanks for sharing. . . . . .

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வசூல் வெள்ளை அறிக்கை! திரைப்படவுலகம் புதிய முடிவு! முன்னணி ஹீரோக்கள் பேரதிர்ச்சி?

தமிழ் திரைப்படவுலகம் ஐசியூ வில் அனுமதிக்கப்பட்டு அநேக நாளாச்சு! கோழியை விற்றுவிட்டு முட்டை வாங்கினோம். அந்த முட்டையும் அழுகிய முட்டையா போச்சே என்று அழுது புலம்புகிற அளவுக்கு...

Close