தனுஷ் அனிருத் மோதல் முற்றுகிறது! காரணத்தை கேட்டா கிறுகிறுங்குது!
அளவுக்கு மிஞ்சிய பணமும், அதைவிட மிஞ்சிய புகழும் கிடைத்தால், மனசு எங்கே சுற்றும்? ரஜினி மாதிரியான நடிகர்களுக்கு இமயமலையை சுற்றும். கமல் மாதிரியான நடிகர்களுக்கு நல்ல நல்ல புத்தகங்களை சுற்றும். தனுஷ் அனிருத் சிம்பு மாதிரியான நடிகர்களுக்கு? அங்குதான் ஆயிரம் டவுட்டுகளை அள்ளிப் போடுகிறது அந்த பணமும் புகழும்!
ஏற்கனவே தனுஷும் சிம்புவும் பேசிக் கொள்வதில்லை. தனுஷும் சிவகார்த்திகேயனும் பேசிக் கொள்வதில்லை. தனுஷும் விக்னேஷ்சிவனும் பேசிக் கொள்வதில்லை. போகிற போக்கை பார்த்தால் தனுஷும் தனுஷுமே கூட பேசிக் கொள்ளாமல் போய்விடுவார்களோ என்கிற அளவுக்கு போகிறது அன்றாட ‘அன் பிரண்ட்’ பொசிஷன்கள். அனிருத் மீது நடுவில் கோபம் கொண்டிருந்த தனுஷ், அவருக்கு பதிலாக தன் காம்பவுண்டுக்குள் சந்தோஷ் நாராயணனை கொண்டு வந்துவிட்டார். இந்த ஒரு காரணத்தை வைத்தே தனுஷும் அனிருத்தும் பேசிக் கொள்வதில்லை என்று பரபரப்பு கிளப்பியது உலகம்.
என்ன நினைத்தார்களோ…? “எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. நாங்க இப்பவும் பிரண்ட்ஸ்தான்” என்றார் அனிருத். சொல்லி வாய் மூடுவதற்குள் அந்த இடி விழுந்துவிட்டது. கம்போசிங்குக்காக அனிருத் வெளிநாடு போயிருக்கிறார். இந்த இடைபட்ட நேரத்தில்தான் அந்த முடிவை எடுத்துவிட்டார் தனுஷ். தனது ட்விட்டர் அக்கவுன்ட்டில் இருந்து அனிருத்தை அன் பாலோ செய்துவிட்டார்.
இதற்கெல்லாம் காரணம், அனிருத் ஊருக்கு போவதற்கு முன் ஜோடியாக ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு சென்றாராம். அதே ஓட்டலுக்கு எதேச்சையாக சென்ற தனுஷ், அங்கு அனிருத்துடன் வந்திருந்த ‘அந்த அவரை(?)’ பார்த்ததும் கடும் கோபத்திற்குள்ளானாராம். அப்புறம் என்ன? அன் பாலோதான் சரியான வழி.
To listen audio click below :-
Amala Paulaa, Andreavaa, Ramyavaa, Aishwaryavaa
[…] Source: New Tamil Cinema […]