தனுஷ் தயாரிக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார்! கால்ஷீட் கிடைக்க உதவிய பெண்மணி யார்?
எம்ஜிஆரும் சிவாஜியும் நடித்த ‘கூண்டுக்கிளி’ படத்திற்கு இப்போதும் மவுசு உண்டு. சரி சமமான அந்தஸ்தில் இல்லாவிட்டாலும் கூட, விஜய்யும் தனுஷும் இணைகிறார்கள் என்றால், எல்லா முனைகளிலும் தலைப்புச் செய்தி அதுவாகதானே இருக்க முடியும்? இன்னும் சில வாரங்கள் கழித்து இந்த புதிய கூட்டணியின் அறிவிப்பு, தமிழ்சினிமாவையே ஒரு புரட்டு புரட்டினாலும் ஆச்சர்யமில்லை.
தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் நிறுவனத்திற்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார் விஜய். அநேகமாக ‘#விஜய் 62’ தனுஷின் தயாரிப்பாக இருக்கக் கூடும். ஏ.ஆர்.முருகதாசும், விஜய்யும் ஒரு புதியப்படம் பற்றிய பேச்சு வார்த்தை தற்போது வெளியே கசிந்து வரும் நிலையில், அப்படத்தை தயாரிப்பது யாராக இருக்கும் என்றொரு கேள்வியும் உலா வருகிறதல்லவா? ஒருவேளை அந்தக் கொடுப்பினை தனுஷுக்கு கிடைத்தாலும் மறுப்பதற்கில்லை என்பதுதான் இப்போதைய நிலவரம்.
தனது சொந்தப்பட கம்பெனியில் தனுஷ் மட்டும் நடித்துக் கொண்டிருப்பவரல்ல. விஜய் சேதுபதிக்கும், சிவகார்த்திகேயனுக்கும் கூட அதில் இடம் இருந்தது. என்ன காரணத்தினாலோ சிவகார்த்திகேயனின் கால்ஷீட் தனுஷ் கம்பெனிக்கு இல்லை என்றானபின் சற்றே கோபத்திலிருந்த தனுஷ், தனது செல்வாக்கை காட்டுவதற்காகவே விஜய்யின் கால்ஷீட்டை நாடியிருக்கலாம்.
ஆமாம்… யாரந்த பெண்மணி? அதான்யா… விஜய்யை தனுஷுக்கு கால்ஷீட் கொடுக்க சொல்லி நச்சரித்து நச்சரித்து அதை நிகழ்த்திக் காட்டினாரே… அந்த பெண்மணி? ஸாரி… ஜென்ட்டில்மென்… த்ரிஷாவை பெண்மணி என்று சொல்ல நமக்கும் கூச்சமாகதான் இருக்கிறது.
கொடி எதற்காக படர்ந்ததோ தெரியாது. ஆனால் கொடிக்கு தேவையான கொள்முதல் விஜய் தனுஷ் இணையும் புதிய படத்திலிருந்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறதாம்!