போலீஸ்னா பொறுக்கி இல்ல! கார்த்தி தரும் கவுரவம்!

காக்கி சட்டைய ஹீரோவுக்கு போட்டா நல்ல போலீஸ். அதே சட்டையை வில்லன் அணிந்தால் கெட்ட போலீஸ். இந்த நல்ல போலீஸ் கெட்ட போலீஸ் விளையாட்டைதான் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் சொல்ல வருகிறார்கள் போலும். சதுரங்க வேட்டை புகழ் வினோத் இயக்கி விரைவில் வெளிவர இருக்கும் ‘தீரன் அதிகாரம்’ ஒன்று படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த நல்ல கெட்ட விஷயத்தை அலசினார் வினோத். நல்ல போலீஸ் கெட்ட போலீஸ் மாதிரி, நல்ல பிரஸ் கெட்ட பிரஸ்சும் இருக்காங்க என்று சம்பந்தமில்லாமல் திருவாய் மலர்ந்த அவரை வினோதமாக கவனித்தது பிரஸ்.

நல்லவேளை… பஞ்சாயத்து ஏதும் நடைபெறாமல் முடிந்த பிரஸ்மீட்டில் கார்த்தி பேசியது கவனிக்கத்தக்கது.

இதில் நடிக்கும்போது போலீஸ்காரர்களின் மறுபக்கத்தை தெரிந்து கொண்டேன். தன் குடும்பத்திற்காக கூட நேரத்தை செலவிட முடியாமல் அழுக்கிலும் மழையிலும் நின்று அவர்கள் செய்யும் தியாகம் மகத்தானது. இந்த படத்தை பார்த்தால் போலீசின் மீதுள்ள பார்வை மாறும். படத்தில் எல்லா நேரமும் யூனிபார்ம் போடாமல் வேறு வேறு உடைகளில் வருகிறேன் என்று உடை விஷயத்தை கார்த்தி வலியுறுத்தினார். அதற்கு காரணம் இருக்கிறது.

இந்த படத்தில் அவர் அணிந்திருக்கும் ஆடைகள் ஆர்கானிக் முறையில் உருவாக்கப்பட்டதாம். தேசிய விருது பெற்ற பூர்ணிமா தயாரித்திருக்கிறார். அதென்ன ஆர்கானிக் உடை என்று அவரே கொஞ்சம் விளக்கி சொல்லியிருக்கலாம்.

ஆந்திராவில் கொடிகட்டி பறக்கும் ரகுல் ப்ரீத்திசிங் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். (எவ்வளவுதான் நல்ல போலீசாக இருந்தாலும், ரொமான்ஸ் பண்ணுவதற்கு ஒரு அழகி தேவைப்படுதே…)

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஒரு கோடி டாக்ஸ் கட்றேன்… எனக்கே கட்டுப்பாடா? அமலாபால் கொதிப்பு!

Close