இனிமே ஹச்சு ஹச்சுன்னு தும்முனாகூட ஹன்சுன்னு ஹன்சுன்னுதான் கேட்குமோ? ஒரு டைரக்டரும் ஹன்சிகாவும்!
தலைப்பை படிச்சுட்டு தார் பாயை போர்த்திகிட்டா அதுக்கு கம்பெனி பொறுப்பல்ல! ஹன்சிகாவுக்கும் உயிரே உயிரே பட இயக்குனர் ஏ.ஆர்.ராஜசேகருக்கும் நடுவில் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. ஆனால் இருக்குமோ என்கிற அளவுக்கு ஹன்சிகா புராணம் பாட ஆரம்பித்திருக்கிறார் அவர். நேற்று மாலை 5 மணிக்கு நாளிதழ் மற்றும் அச்சு ஊடகங்களுக்கு நடந்த பிரஸ்மீட், காலை 12 மணிக்கே துவங்கிவிட்டதாம். எப்.எம்கள், தொலைக்காட்சிகள், வீடியோ வெப்சைட்டுகள் என்று மணி முள் நகர நகர எல்லார் முன்னிலையிலும் ஹன்சிகா புராணத்தைதான் மணியடித்து பாடிக் கொண்டிருந்தாராம் இயக்குனர் ஏ.ஆர்.ராஜசேகர்.
ஏரியாவில் புகுந்து விசாரித்தால்… “பின்ன என்னங்க? பொண்ணு அவ்ளோ ஒத்துழைப்பு கொடுத்துச்சு. அதனால்தான்” என்கிறார்கள். (அட… மறுபடியும் புத்தி புறவாசலுக்கு போவுமே? நீங்க நினைக்கிற மாதிரி ஒண்ணுமில்ல)
இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்றுக்காக அதிகாலை நாலு மணிக்கு அலப்பி என்ற அழகான லொகேஷனுக்கு வந்துவிட்டார்களாம். அதற்கு முன்பே ஹன்சிகா வித் மேக்கப் ரெடி! சுழித்து ஓடும் ஆறு. அந்த ஆற்றின் அடி ஆழத்தில் மரத்தடுப்பு அமைத்து அதில் தண்ணீருக்கு கீழேயே ஒரு மேடையும் அமைத்துவிட்டார்கள். எல்லாம் முன் கூட்டியே செய்த ஏற்பாடு. திரையில் பார்த்தால் அந்த ஆற்றில் ஓடும் தண்ணீரின் மீது ஹன்சிகாவும் ஹீரோ சித்துவும் நடந்து வருவது போல தோற்றம் தரும். ஆனால் ஹன்சிகாவின் உதவியாளர், “ஏன்ங்க… இப்படியொரு ஆபத்தான செட்டப்பா?” என்று அலறியதுடன், “மர மேடை தண்ணிக்குள்ள இருக்கு. அந்த லிமிட் தெரியாம நடந்து போய் தண்ணிக்குள்ள விழுந்துட்டா என்னாகும்? லாங் ஷாட் என்பதால் யாரும் அருகில் கூட இருக்க மாட்டாங்களே… ?” என்றெல்லாம் பயம் காட்ட, “முதல்ல நீங்க இந்த இடத்தை விட்டு கிளம்புங்க” என்று அந்த உதவியாளரை துரத்திவிட்டாராம் ஹன்சிகா. “நம்மை சுற்றி நெகட்டிவ் வைப்ரேஷன் இருந்தாலே ஒரு வேலையும் நடக்காது” என்று கூறியவர், தைரியமாக அந்த ஷாட்டில் நடித்துக் கொடுத்தாராம். இது போல டைப் டைப்பாக ஹன்சிகா புகழ் பாடும் சம்பவங்களை வைத்திருக்கிறார் ஏ.ஆர்.ராஜசேகர்.
ஹ்ம்ம்ம்… சாயங்காலம் வரைக்கும் அதுதான் ஓடுச்சு. ஆமாம்… புல் ஹீரோயின் சப்ஜெக்ட் ஏதும் கையில வச்சுகிட்டு ஹன்சிகாவை கரெக்ட் பண்ணுறாரோ? இருக்கும் இருக்கும்! பின்ன எலி எதுக்கு எட்டு முழம் வேட்டி கட்டணுமாம்?