உளவுத்துறைக்கு தெரிவதற்கு முன் ஆதி, ஆர்.ஜே.பாலாஜி, லாரன்சுக்கு தெரிந்தது எப்படி? இயக்குனர் அமீர் விளாசல்!

சிலரை அடையாளம் கண்டு கொள்ள வேண்டிய நேரம் இது. எப்பவுமே உணர்ச்சிகளின் குவியலாக இருக்கிற தமிழன், திடீர் தலைவராக முயற்சி செய்யும் சிலருக்காகவும் உணர்ச்சிவசப்பட்டு கெட்ட வார்த்தைகளை அவிழ்த்துவிட்டு திட்டுவது, நேரடியாக ஜல்லிக்கட்டு காளையின் மூக்குக்கு நேரே நிறுத்துவதற்கு சமம். இருந்தாலும் தங்களது கருத்தை ஊடகங்களில் ஆணித்தரமாக நிரூபித்து வருகிறார்கள் சிலர். அவர்களில் மிக மிக முக்கியமானவர் இயக்குனர் அமீர்.

நேற்று புதிய தலைமுறை சேனல் விவாதத்தில் பங்கு பெற்ற அமீர் கேட்ட சில கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் லாரன்ஸ், இசையமைப்பாளர் ஆதி, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட சிலர். விவாதத்தில் அமீர் கேட்டதென்ன?

இந்த மாணவர் மற்றும் இளைஞர் கூட்டம் ஆரம்பத்திலிருந்தே அரசியல்வாதிகளையும் சினிமாக்காரர்களையும் உள்ளே விடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தது. நாங்களும் எங்கள் ஆதரவை தெரிவிக்கப் போயிருந்தோம். மதுரை, அலங்காநல்லூர், சென்னை ஆகிய இடங்களில் எங்கள் ஆதரவை தெரிவித்துவிட்டு திரும்பிவிட்டோம். ஆனால் இவர்கள் மூவரும் அங்கேயே தங்கியிருந்தது ஏன்?

அதுவும் இசையமைப்பாளர் ஆதி, தான் இசையமைத்த பாடல்களை அங்கு திரண்டிருந்த இளைஞர் கூட்டத்தின் முன் பெரிய எல்.இ.டி ஸ்கிரின் வைத்து தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டேயிருந்தார். இந்த சுய விளம்பரத்திற்காக ஏன் இந்த இளைஞர் கூட்டத்தை பயன்படுத்திக் கொண்டார்? இதற்காக பல லட்ச ரூபாய் செலவாகியிருக்கும். அது எங்கிருந்து வந்தது?

அது மட்டுமல்ல… இளைஞர் கூட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டார்கள் என்பதை உளவுத்துறையே மறுநாள்தான் சொன்னது. ஆனால் அதற்கு முதல் நாளே ஆதியும் லாரன்சும் ஆர் ஜே.பாலாஜியும் சமூக விரோதிகள் புகுந்துவிட்டதாக கூறியது எப்படி? இவர்கள் உளவுத்துறையை விட நுணுக்கமானவர்களா? என்றெல்லாம் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

பதில் சொல்ல வேண்டியவர்கள் எங்கே?

https://youtu.be/vWryWl0nZ1c

3 Comments
  1. சகாயம் says

    திரு. லாரன்ஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் . கோடியில் புரளும் விஜய் அஜித்து, போராடும் மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு என்ன செய்தார்கள் ??? தமிழக மக்களே சிந்தியுங்கள்.
    வாழ்க தமிழகம் வாழ்க தமிழக மக்கள்

  2. Jolly Payyan says

    இதில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றவர்களை விட திரு.ஆதி அவர்கள் ஒரு வருடமாகவே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து போராடிக்கொண்டிருக்கிறார். மெதுவாக பொய், அதுவும் ஆர்யாவைப் கூட்டிக்கொண்டு போய் வம்பை விலைக்கு வாங்கி, உடனே திரும்பிய திரு.அமீர் அவர்கள் எதற்காக இவ்வாறு பேசுகிறார் என்று தெரியவில்லை…

  3. Sanmugam says

    Whatsoever, students are in real gaand on rj balaji and hip hop tamila for spoiling students image and selling the Jallikattu porattam to politicians?. If we students see balaji doing comedy on big screen, I don’t think it will evoke laughter, rather people will get pissed seeing him on big screen. Top Heroes and Directors and mainly PRODUCERS, think before casting this cross talk comedian. students will boycott him

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Tamizhanda Song Video | KOLANJI Tamil Movie | Samuthirakani | Sendrayan | Naveen M

Close