திருத்தப்பட்ட தியேட்டர் கொள்ளை! டைரக்டர் சமுத்திரக்கனி வேதனை!

‘ஏற்கனவே திருவோடு. அதுல விழுந்ததய்யா கருவாடு’ என்கிற கதையாகிவிட்டது தியேட்டர் கட்டண வலி! குடும்பத்தோடு தியேட்டருக்கு போனால் அரை மாச சம்பளம் அரோகரா. பாப்கார்ன், கூல் டிரிங்க்ஸ் அடிஷனல் என்றால் முழு மாச சம்பளமும் முடிஞ்சது! இந்த லட்சணத்தில் தியேட்டர் கட்டணத்தை ஏற்றிக் கொள்வதற்கு முழு அனுமதி கொடுத்துவிட்டது கோர்ட்.

திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் ரோகிணி பன்னீர் செல்வம், தியேட்டர் கட்டண விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தியேட்டர் பராமரிப்பு தொகை, கரண்ட் பில், தொழிலாளர் கூலி, இவற்றையெல்லாம் கணக்கிட்டு கட்டணத்தை ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. அவரது கோரிக்கைக்கு செவி சாய்த்த நீதிமன்றம், தியேட்டர் கட்டணத்தை மறு சீரமைப்பு செய்து கொள்ள தியேட்டர் அதிபர்களுக்கு அனுமதி வழங்கிவிட்டது. இனி? சினிமா? அதன் கதி?

டமிள் ராக்கர்ஸ் டாட் காம்தான் ஒரே தீர்வு என்று முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டது மக்கள் மனசு. சினிமா ரசிகர்களை திருட்டு விசிடி நோக்கித் தள்ளும் இந்த முடிவுக்கு ஏதாவது விடிவு காலம் பிறந்தால்தான் சினிமா தப்பிக்கும். 150 ரூபாய் டிக்கெட் வருகிற தீபாவளி சமயத்தில் 350 ரூபாய்க்கு விற்கக் கூடிய அபாயம் இருப்பதால், திரைப்பட இயக்குனர்கள் கவலையடைந்திருக்கிறார்கள்.

தனது அதிருப்தியை பிரபல இயக்குனர் சமுத்திரக்கனி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். யாராவது மணி கட்டுங்க மவராசனுங்களே…?

2 Comments
  1. Roja says

    Comment poda vakkillai periya writer. Oru website

  2. Aman says

    More than ticket prices, some movies are meaningless. Example: ஊசி கணக்கா இருந்துட்டு அரசியல்வாதியா அநியாயத்துக்கு பானை சைஸ்கு சவுண்ட் வுட்றான். இதுல வேற 50 ஆளை அடிச்சு பஞ்ச் பேசறான். நம்புறமாரி படம் எடுங்கடா. கொடி படம் பாக்குறதுக்கு கொடில தொங்கராதே மேல்பா

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Destroying The Tamils-Exclusive

https://youtu.be/zi1RmgGH4Jo  

Close