எவ்ளோ பெரிய டைரக்டர் சசி! அவருக்கு இப்படியா?

சொல்லாமலே, ரோஜாக்கூட்டம், டிஷ்யூம், பிச்சைக்காரன்…. இப்படி சொற்ப அளவில்தான் படம் இயக்கியிருக்கிறார் சசி. ஆனால் தமிழ்சினிமாவின் முக்கிய இயக்குர்களில் ஒருவர் என்ற அந்தஸ்தை அள்ளி வழங்கிவிட்டார்கள் ரசிகர்கள். ஏன்? அவரது ‘டச்’ அப்படி!

அதுவும் பிச்சைக்காரன் படம், அந்த வருடத்திலேயே வந்த ஒரே பிளாக் பஸ்டர் படம். அப்படியிருந்தும் சசிக்கு சுக்கிர திசை வரவில்லை என்பதுதான் சோகத்திலும் சோகம். அந்தப்படம் வெளிவந்த சில நாட்களில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம் ஒன்றுக்கு ஸ்கெட்ச் போட்டார் அவர். ஹீரோவுக்கும் கதை பிடித்துவிட, அப்படத்தை தேனான்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக முடிவானது.

தினந்தோறும் ஸ்கிரிப்டை இழைக்கிற வேலையில் இருந்தார் சசி. ஒரு நல்ல நாள் பார்த்து ஷுட்டிங் கிளம்புவார்கள் என்று எதிர்பார்த்தால், கம்பெனியிலிருந்து சசியை கிளப்பிவிட்டுவிட்டார்கள். ஸாரி… சார். இப்ப இருக்கிற சுச்சுவேஷன்ல இந்த படத்தை நகர்த்த முடியாதுன்னு நினைக்கிறேன். பிறகு பார்க்கலாம் என்று கூறி அனுப்பிவிட்டார்களாம்.

ஒரே ஒரு ஹிட் கொடுத்துவிட்டால் போதும். சொந்தக் கம்பெனி. சுட சுட படம் என்று யார் தயவும் எதிர்பார்க்காமல் கிளம்பிவிடும் அப்ரசென்டு இயக்குனர்களுக்கு மத்தியில், நிஜமான கலைஞனுக்கு இப்படியொரு துரதிருஷ்டம்.

மொத்த சினிமாவும் குணசீலம் கோயில் சங்கிலிக்குள் அகப்பட்டு கிடக்கிறதோ என்னவோ? ஐயகோ…

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சினிமா வியாபாரம் – தெரிஞ்சிக்க வேண்டிய விஷயங்கள்…

https://www.youtube.com/watch?v=oK_JX6WAM60&t=148s

Close