சசிகுமாருக்கு ஒரு நீதி அஜீத்துக்கு ஒரு நீதியா? வெடிக்கும் திருப்பூர் சுப்ரமணியன்

பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியனுக்கு அறிமுகம் தேவையில்லை. ரஜினியின் படங்களை மட்டுமல்ல… இன்று டாப்பில் இருக்கும் அத்தனை ஹீரோக்களின் படங்களையும் மொத்த வியாபாரம் செய்த ஹோல் சேல் குடோன் இவர்! அனுபவ அண்டார்ட்டிகா! தனித்துவ தலிபான்!

அப்படிப்பட்ட சுப்ரமணியன், நேற்று பொங்கிவிட்டார் பொங்கி! ஏன்? அஜீத்தின் விவேகம் படத்திற்கு டிக்கெட் ரேட்டை இப்படி தாறுமாறா விற்கிறார்களே என்றுதான். நேற்று ஒரு ஆடியோ பதிவை வெளியிட்டிருக்கும் அவர் விஷாலை நோக்கிதான் அந்த கேள்வியை கேட்டிருக்கிறார்.

“சில மாதங்களுக்கு முன் சசிகுமார் படம் ஒன்று வந்தது. தியேட்டரில் ரேட்டை விட கொஞ்சம் அதிக விலை வைத்து விற்றார்கள். உடனே விஷால் ரசிகர்களும், கார்த்தி ரசிகர்களும் அந்த தியேட்டரை மொய்த்துக் கொண்டு, ‘அதெப்படி அதிக விலைக்கு டிக்கெட் விற்கலாம்?’ என்று சண்டை போட்டார்கள். இத்தனைக்கும் சசிகுமார் படத்திற்கு என்ன விலை அதிகமாக வைத்து விற்க முடியும்? இருந்தாலும், டிக்கெட் கொள்ளைக்கு எதிராக அவர்கள் முழங்கியதை வரவேற்கதான் வேண்டும்”.

“ஆனால் இன்று அஜீத்தின் விவேகம் படத்திற்கு 300, 500, 800 என்று டிக்கெட் ரேட்டுகள் உயர்ந்துள்ளன. விஷால் கார்த்தி ரசிகர்கள் எங்கே போனீங்க? சசிக்கு ஒரு நியாயம். அஜீத்துன்னா ஒரு நியாயமா?” என்று கொதித்திருக்கிறார். அப்படியே இன்னொரு தகவலையும் கூறியிருக்கிறார் அவர்.

திருப்பூர் ஈரோடு பகுதிகளில் அவருக்கு சொந்தமான தியேட்டர்களில் விவேகம் படத்தை வெளியிட்டிருக்கிறாராம். “100 ரூபாய்க்கு அதிகமா எங்கயும் விக்கலேங்க…. நான் ஒழுக்கமா இருக்கேன். மற்றவங்களையும் இருக்க சொல்லுங்க” என்று கூறியிருக்கிறார்.

துணி காஞ்சு இஸ்திரியும் போட்டாச்சு. இனி வெயில் அடிச்சா என்ன? அடிக்கலேன்னா என்ன?

1 Comment
  1. Rajii says

    மற்றவங்களையும் இருக்க சொல்லுங்க சுப்ரமணியன். Ithu nalla irukke avar than thalaivar avaraal onnum seiya mudiyathu ….fans sollanumaam

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Puriyatha Puthir Trailer – 2

https://youtu.be/UfL3Ryp12AY

Close