அஜீத்தின் பெயரை சொல்லி அசிங்கப்பட்ட சுசீந்திரன்! தேவையா இதெல்லாம்?

பொய் வண்டியில் ஏறி, பூலோகத்தை சுத்துற பாதி பேர் சினிமாக்காரர்கள்தான். மீதி பேர் அரசியல்வாதிகள் என்பதுதான் உங்களுக்கு தெரியுமே? யாரு கண்டுக்க போறாங்க என்று ஒரு பொய்யை சொல்லி அசிங்கப்பட்டிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். ஒரே ஒரு நபர் கண்டு கொண்டதன் விளைவு அது.

கடந்த சில மாதங்களாகவே அஜீத், விஜய் பற்றி அடிக்கடி கருத்து கூறுகிறார் சுசீந்திரன். ‘நான் இவ்ளோ நல்லப்படங்கள் பண்ணிட்டேன். ஆனால் அஜீத்தையும் விஜய்யையும் அணுகவே முடியல’ என்று அவர் கூறியதை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. நல்ல பட இயக்குனர்கள் லிஸ்ட்டில் சுசீந்திரனுக்கும் ஒரு இடம் இருப்பதால்தான் இந்த கவலை நமக்கு.

ஆனால் அவர்களை காலம் முழுக்க அணுகவே முடியாது போலிருக்கே என்பது போல அமைந்துவிட்டது அவரது சமீபத்திய நடவடிக்கை. மே 1 ந் தேதி அஜீத்திற்கு பிறந்த நாள். அவரை பாராட்ட வேண்டுமே? “நான் அப்போலோ ஆஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, ஜெயலலிதாம்மா எனக்கு அவங்க கையாலேயே சூப் வச்சு கொடுத்தனுப்புனாங்க. அம்மாவோட மனசு அப்படி” என்று கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எந்த நம்பிக்கையில் அப்படியொரு விஷயத்தை சொல்லியிருப்பார் என்பது ஊருக்கே புரிந்ததுதான். இல்லாத ஜெ எப்படி நேரில் வந்து மறுக்க முடியாதோ? அப்படி யாரையுமே சந்திக்காத அஜீத்தும் இது பற்றி பேசப் போவதில்லை என்று நினைத்திருக்கலாம் சுசீந்திரன்.

“நான் உதவி இயக்குனரா இருந்தபோது ரோஜா ரமணன் என்றொரு உதவி இயக்குனர் இருந்தார். அவருக்கு சிறுநீரகக் கோளாறு வந்தது. 3 லட்சம் ரூபாய் தேவைப்பட்டது. நான் அஜீத் சாரை சந்தித்து கேட்டேன். அவர் பெருமளவு பண உதவி செய்தார்” என்று கூறிய சுசீந்திரன், அஜீத்திற்கு தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

இதை இலக்கியன் என்ற உதவி இயக்குனர் மறுத்திருக்கிறார். “சுசீந்திரன் சொல்வது அநியாயப் பொய். ரோஜா ரமணன் ஆவி கூட இதை மன்னிக்காது. அவருக்காக அஜீத்திடம் பேசியது நான்தான். அவர் எந்த பண உதவியும் செய்யவில்லை. அஜீத்திடம் கால்ஷீட் வாங்க வேண்டும் என்பதற்காக சுசீந்திரன் பொய் சொல்கிறார்” என்று கூறியிருக்கிறார் இலக்கியன்.

சோஷியல் மீடியாவில் நாறிக் கொண்டிருக்கிறது விவகாரம்.

வெற்றிலையில் சுண்ணாம்பு தடவுனா சிவக்கும். இப்படி பொய்யை தடவினா அந்த வெற்றிலையே வாய் விட்டு சிரிக்கும். அட சுசீ… சுசீ…

https://www.youtube.com/watch?v=2ytRA2zO2t0

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மய்யம் விசில் மக்கள் பிரச்சனையை தீர்க்குமா?

https://www.youtube.com/watch?v=bG_qk_a9Qi8&t=2s

Close