ஏக்நாத் பாட்டு! இன்டர்நேஷனல் ஓட்டு!
விஜய் ஆன்டனியின் பிச்சைக்காரன் படத்தில் இடம்பெற்றுள்ள சூப்பர் ஹிட் பாட்டு ‘நூறு சாமிகள் இருந்தாலும்….’ பாடல் இன்னமும் கூட பலரது காலர் ட்யூனாக மனதை இதமாக்கிக் கொண்டுள்ளது.
இந்தப் பாடலுக்கு இப்போது மேலும் ஒரு புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.
2017-ம்இ ஆண்டின் இந்திய சர்வதேச திரைப்பட விழா விருதுகளுக்கான (IIFA Awards 2017) பரிந்துரைகளில் இந்தப் பாடலும் இடம்பெற்றுள்ளது.
இந்தப் பாடலுடன் போட்டியிடும் மற்ற பாடல்கள்:
நெருப்புடா நெருங்குடா… (அருண்ராஜா காமராஜ் – கபாலி)
இது கதையா… (பார்த்தி பாஸ்கர் – சென்னை 28 II)
தள்ளிப் போகாதே (அச்சம் என்பது மடமையடா), நீயும் நானும்.. (நானும் ரவுடிதான்) – கவிஞர் தாமரை.
பாடலாசிரியர் ஏக்நாத் இதற்கு முன் ஏராளமான பாடல்களை, பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் எழுதியுள்ளார்.
நீயும் நானும்… (மைனா)
கண்ணிரெண்டில் மோதி நான் விழுந்தேனே… (உத்தமபுத்திரன்)
குக்குறுகுக்குறு… (ஒரு ஊர்ல ரெண்டு ராஜா)
யாரோ யாரோ… (மீகாமன்)
தேகம் தாக்கும்… (புறம்போக்கு)
போன்றவை இவரது படைப்பில் வெளியான பாடல்களுக்கான சில உதாரணங்கள்.
முன்னணி இசையமைப்பாளர்களின் படங்களில் தொடர்ந்து பாடல்கள் எழுதி வரும் பாடலாசிரியர் ஏக்நாத், தமிழ் இலக்கிய உலகில் மிகுந்த கவனம் பெற்றவர்.
இவர் எழுதிய கெடாத் தொங்கு கவிதைத் தொகுப்பு, கெடை காடு, ஆங்காரம் ஆகிய நாவல்கள், பூடம், குள்ராட்டி, பேச்சுத்துணை ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் பிரபலமானவை.
ஆடு மாடு மற்றும் மனிதர்கள்
ஊர் என்பது ஞாபகமாகவும் இருக்கலாம்
குச்சூட்டான்
போன்றவை ஏக்நாத்தின் அதிகம் வாசிக்கப்பட்ட கட்டுரைத் தொகுப்புகளாகும்.
நூறு சாமிகள் இருந்தாலும்… பாடலுக்கு உங்கள் வாக்குகளையும் பதிவு செய்யலாம். அதற்கு இந்த இணைப்பைச் சொடுக்கவும். www.iifautsavam.com/2017/GlobalVT/index.html
Lyricist Egnath’s song Nooru Saamigal… in IIFA 2017 nomination
Lyricist Egnath’s superhit song of 2016 ‘Nooru Saamigal Irunthaalum…’ from Vijay Antony’s Pichaikkaran movie has got a nomination in IIFA 2017 under best lyric category.
To cast your vote in favorite of the song, pl go to www.iifautsavam.com/2017/GlobalVT/index.html.