ஐயோ தரமணியை இப்படி கிழிச்சுட்டாரே இந்த எழுத்தாளர்?

தரமணி – சிறு பார்வை (18+ வயது வந்தவர்கள் மட்டும், படித்தவுடன் ‘கிழித்து ‘ விடவும்…)

” இவ்வுலகில் மனிதனைவிடக் கொடூரமான இன்னொரு உயிரினம் படைக்கப்படவேயில்லை. ”

சகோதரன் ராமின் மூன்றாவது படைப்பு தரமணி. இம்மாதிரிக் குப்பைப் படங்களை எடுப்பதற்கு பதில் இயக்குனர் ராம் நீலப்படங்களை எடுக்கலாம். தரமணி ஒரு A சர்டிபிகேட் படம் . So strictly prohibited to Children and chicken thieves….

1. வெளிநாட்டில் கொத்து வேலை செய்து கொண்டிருந்த ஒருவன், உடல்நலக்குறைவினால் சிகிச்சைக்காக ஊருக்கு வருகிறான். வந்த மூன்றாவது நாளே தன் வீட்டில் வெடி பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததாகக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டான். இரண்டு நாட்களில் அவனது மனைவி கைது செய்யப் பட்டாள் அவன் விடுவிக்கப் பட்டான். குற்றம் என்னவெனில் , அவனது மனைவிக்கு இன்னொரு ஆண் மீது உடற்காதல். தனக்கும், தன் காதலனுக்கும் இடையூறாக இருந்த கணவனை ஒழிக்க, தன் உடற்காதலனின் உதவியோடு , கல்குவாரியில் உபயோகிக்கும் டெட்டனேட்டர் மற்றும் ஜெலாட்டின் குச்சிகளை வீட்டில் வைத்து விட்டு , அவளே காவல்துறைக்கு தகவல் தருகிறாள். கணவன் சிக்குகிறான், காவல்துறை உண்மையைக் கண்டு பிடிக்கிறது.இரண்டு பேருக்கும் நீதிமன்றம் பல்வேறு பிரிவுகளில் கடுமையான சிறைவாசம் கொடுக்கிறது. அந்தக் காதலனுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. அவனது மனைவியும் குழந்தைகளும் , குற்றவாளியின் கணவனும் நிர்க்கதியாகிறார்கள்.

2. நண்பருடைய ஸ்டுடியோவுக்கு ஒரு ஐந்து பேர் வந்து, தங்கள் கையிலிருக்கும் ஒரு சிடி யைக் கொடுத்து, அதிலிருக்கும் வீடியோவிலுள்ள ஒரு காட்சியை பிரின்ட் போட்டுத் தருமாறு வேண்டுகிறார்கள். அந்த ஐந்து பேரில் ஒருவரது கண்கள் மட்டும் கலங்கியிருந்தன. அது ஒரு Homemade Sex Scandal Video. அந்தப் படக்காட்சியில் இருந்த பெண்மணி அந்தக் கலங்கிய கண்களையுடைய மனிதரின் மனைவியாம். அந்த படம் எடுக்கப்பட்ட இடம் அந்த மனிதரின் வீடு. அந்தப் பெண்ணோடு சல்லாபித்தவன் (பக்கத்து வீட்டுக்காரன் ) அவளுக்கே தெரியாமல் , செல்போனை ஒளித்து வைத்து எடுத்திருக்கிறான். கடைசியில் அவனுக்கே தெரியாமல் அந்த வீடியோ ஊருக்குள் பரவுகிறது. அப்படித்தான் அவளது கணவனுக்குத் தெரிய வந்தது. அந்த இருவரது முகங்களும் ஸ்க்ரீன் ஷாட் எடுக்கப் பட்டு பிரின்ட் செய்யப்பட்டு, நேராக மகளிர் காவல் நிலையம் கொண்டு செல்லப்படுகிறது. அந்த மனைவி வரவழைக்கப் படுகிறாள். அந்தக் கணவன் காவல்துறை ஆய்வாளரிடம் (பெண் ) சொல்கிறார்.

இன்ஸ்பெக்டரம்மா ! நான் அவளைக் கொலை செய்ய விரும்பவில்லை. என் இரண்டு ஆண் பிள்ளைகள் தெருவில் நிற்கும். நான் என் குடும்பத்துக்காகவும் , பிள்ளைகளுக்காகவும் ராவும் பகலும் ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கிறேன். எனக்குத் தெரியாமல் இவள் இத்தனை நாளாய் இந்தக் கேடு காரியத்தை செய்து வந்திருக்கிறாள். இனி அவளோடு நான் வாழ விரும்பவில்லை. எங்களை பிரித்து விடுங்கள். பிள்ளைகள் யாரோடு இருக்க விரும்புகிறார்களோ ? இருக்கட்டும். என்கிறார். முதலில் பலவிதமாக நடித்து மறுத்து , மாய்மாலம் வைத்து , இறுதியில் ஒத்துக் கொள்கிறாள் மனைவி. மேலும், அந்த வீட்டை அவளுக்குக் கொடுக்க வேண்டும் என்றும் மாதாமாதம் ஜீவனாம்சம் தரவேண்டுமெனவும் கேட்க , அந்தக் காவல்நிலையம் கொதித்துப் போகிறது.

அது வரையில் பேசாமல் இருந்த அந்தப் பெண் இன்ஸ்பெக்டர், அவளை இழுத்துப் போட்டு நாலு சாத்து சாத்தி , ஏண்டி ! இன்னொருத்தன்கூட திருட்டுத் தனமாகப் படுக்க உனக்கு சட்டம் தேவையில்ல …. கணவனுக்குத் தெரிஞ்சி , பிரியும் போது ஜீவனாம்சம் உனக்கு சட்டப் படி தரணுமா?என்று ருத்ர தாண்டவம் ஆடுகிறார். இறுதியில் சட்டப் படி அவர்கள் பிரிந்து தனித்தனியே செல்கிறார்கள். பிள்ளைகள் தன் தாயோடு செல்ல மறுத்து தகப்பனோடு செல்கிறார்கள். அவள் தனியே செல்கிறாள். அவளது கள்ளக்காதலன் தன் மனைவியின் சகோதரர்களால் அடித்து விரட்டப்பட்டு தலைமறைவாகிறான். இங்கும் இரண்டு தனி மனிதர்களின்சிற்றின்ப வேட்கையால் இரண்டு குடும்பங்கள் சிதைக்கப்பட்டன.

3. திடீரென்று தன் வீட்டுக்குள் நுழைந்த ஒரு ஆசிரியர் , தன் மனைவி இன்னொருவனுடன் படுக்கையில் அலங்கோலமாகக் கிடந்ததைக்கண்டு நிலை குலைகிறார். வீட்டை விட்டு வெளியேறுகிறார். நன்றாகக் குடித்து விட்டு வீட்டுக்குத் திரும்ப வருகிறார் ஐந்து வயதில் ஒரே ஒரு பெண்குழந்தை . அப்பா’ வென ஓடி வருகிறது. அணைத்துக் கொண்டு அழுகிறார். குழந்தைக்குப் புரியவில்லை. அன்றிலிருந்து அவர் தன் மனைவியோடு பேசுவதில்லை, முகத்தில் முழிப்பதில்லை. வீட்டுக்குத் தேவையான அத்தனை பொருட்களும் வீட்டுக்கு வந்து விடும். அவர் மட்டும் தனியே சமைத்துக் கொள்வார். அவளிடம் பச்சைத் தண்ணீர் கூட வாங்குவதில்லை. மகள் வளர, வளர தம் பெற்றோர்கள் ஏன் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதில்லை என்று குழம்புகிறாள். அப்பா ஏதேதோ சொல்லி மகளை சமாளிக்கிறார். மகள் வளர்ந்து , மகளுக்குத் திருமணம் முடிந்த மறுநாள், அவர் தன் மனைவியை விவாகரத்து செய்கிறார். அப்போது அவருக்கு வயது ஐம்பத்தி ஐந்து வயது , மனைவிக்கு ஐம்பத்தி ஒன்று. இந்த வயதில் என்ன மனக்கசப்பு ? அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவரை வசை பாடித் தீர்த்தார்கள். ஒரு ஐந்து வருடம் கழித்து அவர் இறந்த போது, அவரது பெட்டியில் இருந்து கிடைத்த ஒரு கடிதத்தில் இவ்வாறு எழுதப் பட்டிருந்தது.

” இன்று நான் உன்னைத் தண்டித்திருந்தால் , நான் சிறைக்கு சென்றிருப்பேன். என் பிள்ளை ஒரு கொலைகாரனுக்கும், ஒரு நடத்தை தவறியவளுக்கும் பிறந்ததாக பறைசாற்றப் படுவாள். நீ இன்று செய்த செயலை நாளை அவள் தன் வயிற்றுப் பிழைப்புக்காகச் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகி, அவளது எதிர்காலம் சீரழிந்து போகலாம். நீ இன்று செய்த காரியம் உன்னளவில் உனக்கொரு சிற்றின்பமாகவோ , பேரின்பமாகவோ இருந்திருக்கலாம். ஆனால் எனக்கோ , காலம் முழுவதும் ஆறாத ஒரு வடு. உன்னை நான் ஒதுக்கி வைப்பதுதான் நான் செய்யப்போகும் தவறு எனில், நீ என்னை மன்னிக்கத் தேவையில்லை. அதை உனக்கான தண்டனையாக ஏற்றுக்கொள். உன்னோடான இனி எனது பயணம் வலியும் , தனிமையும் , துரோகமும் நிறைந்ததாக இருக்கலாம். என்றாவது ஒருநாள் நான் உன்னை மன்னித்தால் அன்று எனக்கு புத்தி சுவாதீனம் ஏற்பட்டுவிட்டது என்று எடுத்துக் கொள். ஒருநாள் இக்கடிதத்தை நீ படிக்கும் போது உனக்கு வலிக்கலாம் . அதுவே நான் அடையும் இறுதி ஆர்கசமாக இருக்கும். ”

கடிதத்தின் கடைசியில் அந்த சம்பவம் நடந்த தேதி போட்டு , கையொப்பமிட்டிருக்கிறார். எத்தனை உக்கிரமான வார்த்தைகள் ? அவர் தன் மனைவியோடு பேசாமல், ஒரே வீட்டில் வாழ்ந்த காலம் சுமார் இருபத்தியொரு ஆண்டுகள்…..

4. ஒரு பத்தாம் வகுப்பு பள்ளிச்சிறுமி தன் வீட்டுத் தண்ணீர்த் தொட்டியில் அமிழ்த்தப் பட்டு கொலை செய்யப் பட்டாள். பிரேதப் பரிசோதனையில் அவள் வயிற்றில் ஐந்து மாதச் சிசு இருந்தது கண்டு பிடிக்கப் பட்டது. சிறுமியின் தந்தையையை விசாரணை செய்ததில் அவளது வயிற்றில் இருந்த குழந்தை அவளது அப்பாவினுடையது என்று தெரிய வந்தது. முன்னாள் ராணுவ வீரரான அவளது தந்தை கைது செய்யப்பட்டு இப்போது சிறையில் ‘ வாடுகிறார் ‘.

5. ஒரு பெண் தன் கணவனையும் , தன் மூன்று பெண் குழந்தைகளையும் நடுத்தெருவில் விட்டுவிட்டு தன் திடீர்க் காதலனோடு ஓடிப்போகிறாள். கணவன் தன் பிள்ளைகளுக்காகப் போராடி மூன்று குழந்தைகளையும் வளர்க்கிறான். நன்றாகப் படிக்க வைத்து மூன்று பேரையும் கல்யாணம் செய்து கொடுத்து விட்டு, ஒருநாள் தன் வீட்டுத் திண்ணையில் ஒரு பிச்சைக்காரி உட்கார்ந்திருந்ததைக் கண்டான். முகச்சாயலில் தன் ஓடிப்போன மனைவியைக் கண்டவன் அதிர்கிறான். சுமார் இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து வந்து மன்னிப்புக்காகக் கையேந்தியவளின் கைகள் அரவணைக்கப் பட்டன. அவள் ஓடிப்போனதிலிருந்து மூன்றாவது மாதம் அவளை , அவளது இச்சைக் காதலன் துரத்தி விட்டிருக்கிறான். அத்தனை காலமும் எங்கெங்கோ வேலை செய்து வயிறு வளர்த்திருக்கிறாள் . ஆச்சர்யம் என்னவெனில் அவளது மூன்று பிள்ளைகளுக்கும் தன் தாயின் முகம் நினைவே வரவில்லை. அவர்களால் அந்தப் பெண்மணியை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

6. ஒரு மெத்தப் படித்த பெண்மணி , நவீன வாழ்க்கைமுறையைக் கையாண்ட அவளும் , அவளது கணவரும் அவ்வளவு அன்னியோன்யம். பார்த்தால் மற்றவர் பொறாமை கொள்ளும் அளவு வாழ்ந்தார்கள். திடீரென்று ஒருநாள் அவளது முகநூல் கணக்கில் வேறொரு நபரின் பெயர் அவள் பெயரின் பின்னால் இணைக்கப் பட்டிருந்தது. அவர்கள் இருவரும் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

7. கள்ளக் காதலியின் மூன்று மாதக் குழந்தை தாங்கள் உல்லாசமாக இருக்கும் போது பாலுக்காக அழுததால், அந்தக் காதலன் அக்குழந்தையை சுவற்றில் மோதிக் கொன்றான்.

8. குடிக்கப் பணம் கேட்டுத் தராததால் , தன்னைப் பெற்ற தாயை , தலையில் குழவிக்கல்லைப் போட்டு ஒரு மகன் கொலை செய்தான்.

9. தான் காதலித்த பெண் தன்னை மணக்க மறுத்ததால் , அவளோடு தான் எடுத்து வைத்திருந்த அந்தரங்கப் படங்களை இணையத்தில் வெளியிட்டதால் அப்பெண் அவமானம் தாங்க முடியாமல் தூக்குப் போட்டு செத்துப் போனாள்.

10. தன் மகனின் இரண்டு வயது பெண் குழந்தையை சொந்தத் தாத்தாவே பாலியல் வன்புணர்ச்சி செய்து கொன்று , வீட்டுக்குள் புதைத்தார்.

11. பதின்மூன்று வயதுக்குட்பட்ட நான்கு வயது சிறுவர்கள் சேர்ந்து , ஒரு எழுபது வயது மூதாட்டியைக் கற்பழித்துக் கொலை செய்தனர்.

12 .ஒரு மாநிலத்தை ஆண்ட ஒரு இரும்புப் பெண்மணி தனக்கு நேர்ந்தது என்ன என்றே தெரியாமல் , எழுபத்தைந்து நாட்கள் கழித்து புதைக்கப் பட்டாள். அவளோடு சேர்ந்து அவளது ரகசியங்களும் புதைக்கப்பட்டன.

13 வது எண் பேய்களுக்கு உரியதானதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

மேற்கூறிய அனைத்தும் தமிழ்நாட்டில் தினந்தோறும் நிகழ்ந்தவை , நிகழ்ந்து கொண்டேயிருப்பவை. இவையெல்லாம் எனக்கு ரொம்பப் பழக்கப் பட்டவை. ஒருகாதில் வாங்கி விட்டு மறுகாதில் கடந்து செல்வேன். மேற்கண்ட குற்றங்களில் இருபாலருக்கும் சரிபாதி பங்குண்டு. இங்கு பெண்ணியமும் கிடையாது… ஆணியமும் கிடையாது.

நீதிமன்றங்களின் ஒவ்வொரு புதிய தீர்ப்புகளும், ஒவ்வொரு சட்டத் திருத்தங்களை முன்னெடுப்பது போல , மேற்கூறிய மனித இச்சைகள் அல்லது மனித மனம் சார்ந்த இயல்புக்கு மாறான சம்பவங்கள் அல்லது குற்றங்கள் உளவியல் குறித்த மாற்றங்களை அறிவிக்கின்றன அல்லது மேம்படுத்தவே செய்கின்றன.

உங்கள் நாட்டில் ஆயிரம் பேர் இருந்தால் , அது ஆயிரம் புத்தங்கங்களாகவே கருதப்படும். எல்லாப் புத்தகங்களும் ஒன்றல்ல. அவைகள் கண்மணிகளைப் போலவே , கைரேகைகளைப் போலவே வேறுவேறானவை என்கிறார் உளவியலாளர் இவான் செர்ஜி டிமிட்ரியஸ். ( உடனே கூகுளில் சென்று யார்ரா அந்த டிமிட்ரியஸ்னு தேடாதீங்க… அந்தாளு செத்து ஆயிரம் வருசமாச்சி)

அது போலவே வக்கிரங்களும் வேறானவை. அவை மனிதர்களுக்கு மனிதர்கள் வேறுபடும். ஒவ்வொரு வீடும் வேறு … ஒவ்வொரு தெருவும் வேறு…… Antichrist , Malena, Fifty shades of grey, Shame ஆகிய படங்களைக் கொண்டாடும் நான் தரமணியைக் கொண்டாடப் போவதில்லை. ஏனென்றால் அவை உலக சினிமாக்கள். தரமணி தமிழ் சினிமா …. தமிழ் சினிமாவை அவ்வளவு எளிதில் உலக சினிமாவில் சேர்க்க முடியுமா என்ன ?

பிரபல பத்திரிகை ஒன்று ஒரு பிரமாண்டமான இயக்குனரின் ஒரு படைப்பை இப்படி காறித் துப்பி ஒரே வரியில் விமர்சனம் செய்திருந்தது. அதாவது ” ச்சீ ” என்று போட்டிருந்தார்கள். அன்றோடு அந்தப் பத்திரிக்கையின் விமர்சனத்தைப் படிப்பதை விட்டு விட்டேன். சாதாரணமாக ஒரு படத்திற்கு 35 மதிப்பெண்களே தராத அந்த விமர்சனக்குழு அந்த இயக்குனரின் அந்தப் படைப்பை ஒரு ஆறு பக்கங்கள் ஒதுக்கி , அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்துப் போட்டு வெறும் 2 மதிப்பெண்கள் போட்டிருந்தால் , அந்த இயக்குனருக்கு ஒரு தெளிவைப் பிறப்பித்திருக்கலாம். அதை விட்டுவிட்டு அந்த இயக்குனரை கைவிட்டது என்னவோ தனிமனிதச் சாடல்தான் என்று எனக்கு தோன்றியது. மேலும் அந்த இயக்குனர் அந்தப் படத்தில் , பதின் பருவத்தினரின் இயல்பான ஈர்ப்புகளைக் கொஞ்சம் அதிகமாகவே காட்சிப் படுத்தியிருப்பார்.

கழிவறைக் கோப்பைக்குக் காட்டும் என் பிட்டத்தைப் பொதுவில் காட்டினால் என்ன வெட்கம் எனக்கு வருமோ அதுதான் அந்தப்படம். படத்தின் பெயர் பாய்ஸ், இயக்குனர் ஷங்கர், பத்திரிக்கை ஆனந்த விகடன். இது போலத்தான் நாம் இப்போதைக்கு ஒரு படத்தை ஒற்றைச் சொல்லோடு கடந்து செல்கிறோம் ‘ படம் மொக்கை ‘ என்று.

தரமணி மொக்கைப் படமா என்றால் அதை எப்படிச் சொல்ல …. மொக்கைப் படமாக இருந்திருந்தால் ராமின் மூன்றாவது படம் மொக்கை என்று சொல்லியிருக்கலாம். இராணுவத்துக்காக உபயோகப் பட்ட இணையதளம் என்று புழக்கத்துக்கு வந்ததோ அன்றே உலகத்தின் முடிவு ஆரம்பமாகி விட்டது. மீத்தேன் முதற்கொண்டு மியா காலிஃபா வரை என் தேடல் முழுவதும் அதில்தான். வெளியில் வந்தால் மட்டும் நான் ஒரு பரம யோக்கியன். இருட்டுக்குள் நான் காட்டும் கூத்துக்கள் அத்தனையும் கசவாளித்தனம்.

தரமணி, மணிரத்தினத்தை விடவும் தரமான ஒரு வைடூரியத்தால் கோர்க்கப் பட்டிருக்கிறது. யார் பார்ப்பதில்லை எதிரில் குனியும் எவளோ ஒருத்தியின் மார்பின் இடுக்கை ? யார் செய்வதில்லை சுய இன்பம் ? யார் படித்ததில்லை மஞ்சள் பத்திரிக்கை ? யார் பார்த்ததில்லை நீலப்படம் ? யாருக்கு எதிர்பாலினத்தைக் கண்டு ஈர்த்ததில்லை ? யார் பிறன்மனை நோக்காதவர் ? (நோக்குதல் மட்டும் ) யார் காதலித்ததில்லை ? இவை யாதொன்றையும் செய்யாதவர் தங்கள் கல்லை ராமின் மீது எறியுங்கள் அல்லது ஒரு மனநல நிபுணரைப் பாருங்கள்.

சத்தமாய்க் கெட்ட வார்த்தை ஒன்று ஒரு சாமானியனின் வாயிலிருந்து சாதாரணமாய் விழுந்தால் அது இயல்பு. அதுவே சமுதாயத்தில் உயர்ந்த ஒருவரிடம் இருந்து சன்னமாய் வெளிப்பட்டால் அது நாகரிகம். fcuk u ( French Connection United Kingdom என்று எடுத்துக் கொள்ளவும் )

சத்தமாய் ஒருவன் கெட்ட வார்த்தை பேசிவிட்டால் அவன் சாமானியன் என்றால் ராம் ஒரு வெகு சாமானியன். சாமானியனின் படைப்பை எப்படி நான் தூக்கிப் பிடிப்பேன் ? ஏனென்றால் ராம் ஒரு தமிழன். தரங்கெட்ட படைப்பேயானாலும் கூட தகவல் தொழில் நுட்ப சாதனத்தால் , தகவல் பரிமாற்ற சமூக வலைத்தளங்களைத் தவறாக பயன்படுத்துவோர் மற்றும் தொழில் நுட்ப சாதனங்களைக் குறித்த அறிவு இல்லாததால் ஏற்படும் அபத்தங்களையும் ஏற்படும் மிகப்பெரிய சீரழிவை இன்று நிறைய பேர் அனுபவிக்கிறார்களே ???? அதைப் பற்றி தரமணி பேசவில்லையா ?

ஒன்று போல படமெடுக்க வேண்டுமெனில் அண்ணன் ஹரியைக் கூப்பிட்டு சிங்கம் படத்தை 45 பாகங்களாக எடுக்கச் சொல்லலாம். இல்லையென்றால் ஓய்.ஜி. மகேந்திரனின் மேடை நாடகங்கள் பார்க்கலாம்.

தரமணி ஒரு தரமான படமாகயிருந்திருந்தால் மேற்கூறிய 12 trilogy யைத் தொகுத்திருந்தால் ராம் சர்ச்சைக்குள்ளாகியிருப்பார். அவரது படங்களைக் காரித்துப்பிவிடலாம்.

தினசரிச் செய்திகளில் நாம் படிக்கும் சம்பவங்கள் இம்மாதிரியான பின்னணியிலேயே உருவாகின்றன. ஒரு மாலை நாளிதழ் விற்கவே ஒரு பாலியல் பலாத்கார சம்பவத்தையும் , வாராந்தரி இதழ் விற்க பெண்களின் படத்தையும் , பொருட்கள் விற்க பெண்களையும் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. இதில் இரண்டு பெண்களின் கதையைச் சொன்னால் அது சர்ச்சையாகும் என்றால் இது ராமின் அடுத்த படைப்புக்கு முன்னோடியாக அல்லது அடுத்தட படமும் சர்ச்சையாகவே இருக்கக்கூடும், இருக்கட்டும் …. இந்தப் பதிவு சர்ச்சைக்குள்ளாகுமானால் யாரோ ஒருவர் என்னை விமர்சனம் எழுதக் கூப்பிடலாம்.

ராமண்ணே ! என்னை நீங்கள் மறந்திருக்கலாம். ஆகி விட்டன நாம் சந்தித்து….. ஒன்பது ஆண்டுகள். அன்று ஒரு படம் மட்டுமே உங்களது. இன்று ஒன்பது வருடங்கள் ஆகியும் மூன்று படம்தான் எடுத்திருக்கிறீர்கள்.

நீங்க ஏன் சினிமா எடுக்ககூடாது ? இந்த அஞ்சரைக்குள்ள வண்டி, சேட்டண்டே கிண்ணத்தப்பம், கின்னாரத் தும்பிகள் , அவளிண்டே ராவுகள் வகையறாப் படங்களை எடுக்கலாமே ? சத்தமே இல்லாமல் , தலையில் துண்டைப் போட்டுட்டுப் போய் பார்ப்பார்கள். யாரும் விமர்சிக்கவும் மாட்டார்கள். அவ்வளவு ஏன் ? படம் பார்த்த விஷயத்தையும் மூச்சு விடமாட்டார்கள். ஒன்பது வருடங்காளாய் டூ வீலரில் சுற்றிக் கொண்டிருக்கும் என் அண்ணன் ராம் காரில் போவதை நாங்களும் பார்ப்போம்.

இந்தப் பன்னிரெண்டு நிகழ்வுகளையும் எனக்கு மிகவும் நெருக்கத்தில் கண்டதால் சகோதரன் ராமின் தரமணி அவ்வளவு சர்ச்சைக்குரியது இல்லை அல்லது மணிரத்னம் அளவுக்கு பேர் வாங்கவில்லை. அதனால்தான் இந்தப் படத்தை விமர்சிக்கும் தகுதி எனக்கில்லை. ஆனாலும், பாத்தியா… என் அண்ணன் எடுத்துருக்கான் பாத்தியா? அது படம் என்று சொல்லும் படம் தரமணி…

என்னடா ? ஒண்ணோட ஒண்ணு தொடர்பே இல்லாமல் இருக்கேன்னு நீங்கள் நினைத்தால் அதுதான் மொட்டைத் தலைக்கும் , முழங்காலுக்கும் உள்ள தொடர்பு.

என்னடா ? இந்தக் கழிசடைப் படத்தை இவ்வளவு தூக்கிப் பிடிக்குதே இந்த மூதேவின்னு நினைத்தால் சந்தேகமே இல்லை நான் ஒரு கழிச்சுப் போட்ட கசவாளி.

– பிரபு தர்மராஜ் முகநூலில் இருந்து…

2 Comments
  1. Saravanan says

    super……ungaloda mozhi nadai rompa nalla eruku

  2. Mohan says

    ‘தமிழன்’ என்பதால்.. உலக படமாக ஏற்க மறுக்கிறார்கள் ? அந்த இல்லுமினாட்டி கான்செப்ட்ட மட்டும் தம்ப்ரீ ஏன் விட்டுருச்சு.. ??

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Oviya Video Released | Big Boss

https://youtu.be/ujw1ijydHBw

Close