கெஞ்சிக் கூத்தாடி ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேர்ந்த ஹன்சிகா! தரைமட்ட சம்பளமாம்?
ஹன்சிகாவின் நிலைமை இப்படியாகும் என்று அந்த மேக்கப் பாக்சே கூட நினைத்திருக்காது. ஒன்றரை கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ஹன்சிகாவின் இப்போதைய சந்தை மதிப்பு வெறும் ஐம்பது லட்சம்! அதுவும் ஜி.வி.பிரகாஷுக்கு அவரே போன் அடித்து, “என்னை ஜோடியா சேர்துக்கங்க” என்று பல வாரங்களாக கெஞ்சி வந்ததன் விளைவு… ஹன்சிகாவுக்கு யெஸ் சொல்லிவிட்டார் ஜி.வி.
இதையடுத்து நடந்ததுதான் பெரும் மன உளைச்சல். இந்தப்படத்தை எழில் இயக்கவிருப்பதாகவும் ஜி.வி.க்கு ஜோடியாக சமந்தாவும் ஹன்சிகாவும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட்டில் நடிப்பதே காலக் கொடுமை. இதில் ஐம்பது லட்சம்தான் முடியும் என்று சொன்ன எழிலிடம், அதுவும் ஓ.கே என்று தரை மட்டத்திற்கு இறங்கி வந்த ஹன்சிகாவின் செயல் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏன் இப்படியொரு முடிவை எடுத்தார் ஹன்சிகா? சும்மாதானே கிடக்குது? எடுத்துட்டு போய் குளக்கரையில போட்டால் நாலு பேர் துணி துவைக்க உதவுமே என்று ரிட்டையர் ஆன அம்மிக்கல்லை கேட்பார்கள் இல்லையா? அப்படி கேட்க ஆரம்பித்துவிட்டார்களாம் அவரை. சூரி, வடிவேலுகெல்லாம் ஜோடியாக நடிக்க அழைப்பதற்குள் ஓரளவுக்கு சுமாரான ஹீரோக்களுக்கு ஜோடி சேர்ந்துவிட்டால், உள்ளதை தக்க வைத்துக் கொள்ளலாமே? அதற்காகதான் இப்படியொரு முடிவை எடுத்தாராம் அவர்.
கமிஷன் கம்மியாக இருந்தாலும் பரவாயில்லை என்று மனசை கல்லாக்கிக் கொண்டு ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்த அவரது மேனேஜருக்கு நடு வீட்ல வச்சு மாவிளக்கு போட்டுக் கொண்டிருக்கிறார் ஹன்சிகாவின் மம்மி! அதுதான் பலத்த சோகம்!
https://youtu.be/RjnDUTrf5KM